
மனைவியுடன் விவாகரத்தா... : நடிகர் கோவிந்தா தரப்பு என்ன சொல்கிறார்கள்
இந்த நிலையில் அவரது மனைவி சுனிதா அஹுஜா விவாகரத்திற்கு விண்ணப்பித்து நோட்டீஸ் அனுப்பி இருப்பதாக ஒரு செய்தி சோசியல் மீடியாவில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவிந்தா 1986ல் சினிமாவில் நுழைந்தார். அடுத்த வருடமே சுனிதாவை திருமணம் செய்து கொண்டார்.
இந்த நிலையில் கோவிந்தாவின் மேனேஜர் சசி சின்ஹா இந்த செய்தி குறித்து கூறும்போது, “சுனிதா அஹுஜா நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்துள்ளார் என்பது தெரியும். அது விவாகரத்து மனுவா என்று எங்களுக்கு தெரியாது. அது குறித்து எங்களுக்கு எதுவும் இதுவரை நோட்டீஸ் வரவில்லை” என்று கூறியுள்ளார்.
அதே சமயம் கடந்த சில நாட்களாகவே கோவிந்தாவுக்கு நான் தான் நடிப்பு, நடனம் கற்றுக்கொடுத்தேன் என்பது போல சில கருத்துக்களை சுனிதா கூறி வருகிறார் என்பதையும் குறிப்பிட்டுள்ளார் மேனேஜர் சசி சின்ஹா. அது மட்டுமல்ல கடந்த சில வருடங்களாகவே கோவிந்தா தனியாக ஒரு பங்களாவிலும் சுனிதா ஒரு பிளாட்டிலும் வசித்து வருகிறார்கள் என்றாலும் கூட அதற்காக அவர்கள் பிரிந்து வாழ்கிறார்கள் என்று அர்த்தம் இல்லை என்றும் கோவிந்தாவின் இயல்பான குணாதிசயமே இதுதான் என்றும் குறிப்பிட்டுள்ளார் சசி சின்ஹா.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!