
ஓடிடியில் சாதனை புரியும் துரந்தர்
டிசம்பர் 5ல் வெளியான இந்தப் படம் கடந்த வருடத்தில் 1000 கோடி வசூலைக் கடந்த ஒரே படமாக அமைந்தது. மொத்தமாக சுமார் 1400 கோடி வசூலை இந்தப் படம் பெற்றிருக்கும் என்பது பாக்ஸ் ஆபிஸ் தகவல்.
ஜனவரி 30ம் தேதி இப்படம் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியானது. ஹிந்தியில் மட்டுமல்லாது தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளிலும் டப்பிங் செய்து வெளியிட்டார்கள். கடந்த பத்து நாட்களில் ஓடிடி தளத்தில் இந்தப் படம் 15 மில்லியன் பார்வைகளைக் கடந்து புதிய சாதனையைப் படைத்துள்ளது.
முதல் 3 நாட்களில் 7.6 மில்லியன் பார்வைகள், அடுத்து பிப்ரவரி 2 முதல் 8 வரையில் 8.2 மில்லியன் பார்வைகள் என 15 மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ளது.
11 நாடுகளில் இந்தப் படம் டிரெண்டிங்கில் நம்பர் 1 இடத்தில் உள்ளது. இப்படத்தின் கதைக்களமாக இடம் பெற்ற பாகிஸ்தான் நாட்டில் கூட டிரெண்டிங்கில் முதலிடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இப்படத்தின் இரண்டாம் பாகமான "துரந்தர் 2" படம் மார்ச் மாதம் 19ம் தேதி தியேட்டர்களில் வெளியாக உள்ளது.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!