
துரந்தர் 2 ஓடிடி வெளியீடு தள்ளிப் போகிறது
ஏப் 09, 2026
ஆதித்யா தர் இயக்கத்தில் ரன்வீர் சிங் நடித்து மார்ச் 19ம் தேதி திரைக்கு வந்த படம் ‛துரந்தர் தி ரிவெஞ்ச்". இந்த படத்தின் முதல் பாகம் 1300 கோடி வசூலித்த நிலையில், தற்போது இரண்டாவது பாகம் இதுவரை 1,637 கோடி வசூலித்துள்ளது. தொடர்ந்து தியேட்டர்களில் வசூலித்து வருகிறது. இந்த படத்தை மே 14ம் தேதி ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியிட திட்டமிட்டு இருந்தார்கள். ஆனால் ஐபிஎல் போட்டி தொடர் நடப்பதால் கிரிக்கெட் மீதான ஆர்வத்தில் திரைப்படத்தை பார்க்கும் பார்வையாளர்களின் எண்ணிக்கை குறைந்து விடும் என்பதால் துரந்தர் 2 படத்தின் ஓடிடி வெளியீட்டை மே மாதத்திலிருந்து ஜூன் மாதத்திற்கு தள்ளி வைத்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement
















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!