
கிராமத்து மனிதராக ஷாருக்கானால் நடிக்க முடியாது : பிரியதர்ஷன்
இது குறித்த பேட்டி ஒன்றில் பிரியதர்ஷன் கூறும்போது, “அக்ஷய் குமார் ஒரு காமன் மேன் போன்றவர். அவரை எந்த கதாபாத்திரத்திலும் பொருத்தி பார்க்க முடியும். ஹைடெக் மனிதராக இருந்தாலும் சரி, கிராமத்து விவசாயியாக இருந்தாலும் சரி.. அவரது உடல் மொழி அபாரமாக ஒத்துழைக்கும். அதே சமயம் ஷாருக்கானால் இப்படி கிராமத்து மனிதர் கதாபாத்திரத்தில் ஒருபோதும் நடிக்க முடியாது. காரணம் அவரது உடல்வாகும் அவர் பிறந்து வளர்ந்த சூழலும் அப்படி.
நான் அவரை வைத்து பில்லு பார்பர் என்கிற படத்தை இயக்கியபோது கேரளாவில் ஒரு சில கிராமத்து பகுதிகளுக்கு அவரை அழைத்துச் சென்றேன். எனக்கு நன்கு தெரிந்த இடம் தான் அவையெல்லாம். ஆனால் ஷாருக்கான் என்னிடம் இந்த இடங்களை எல்லாம் எப்படி கண்டுபிடித்தீர்கள் என்று ஆச்சரியமாக கேட்டார். மேலும் நான் நகரத்திலேயே பிறந்து வளர்ந்ததால் இது போன்ற கிராமங்களை பார்த்ததில்லை என்பதையும் அவரே வெளிப்படையாக ஒப்புக் கொண்டார் என்றும் பிரியதர்ஷன் கூறினார்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!