
பாகுபலி 2 வசூலை முறியடித்த துரந்தர் 2
முதல் வார முடிவில் "பாகுபலி 2" படம் மொத்தமாக சுமார் 850 கோடி வசூலித்ததாகத் தகவல். அந்த சாதனையை 6 நாள் வசூலில் "துரந்தர் 2" படம் முறியடித்து 900 கோடியை நெருங்கி விட்டதாக பாக்ஸ் ஆபீஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தியாவில் மட்டுமல்லாது வெளிநாடுகளிலும், குறிப்பாக அமெரிக்காவிலும் "துரந்தர் 2" படத்திற்கு தினமும் ஒரு மில்லியன் யுஎஸ் டாலர் வசூல் கிடைத்துள்ளது. அரபு நாடுகளில் படம் வெளியாகி இருந்தால் அதன் மொத்த வசூல் சாதனை "புஷ்பா 2" படத்தை மிஞ்சியிருக்கும் என்கிறார்கள்.
"புஷ்பா 2" படம் முதல் வார வசூலில் 1000 கோடியைப் பெற்றிருந்தது. அந்த சாதனை இதுவரை முறியடிக்கப்படாமல் இருக்கிறது.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!