
இரண்டு இன்ச் உயரத்தால் இரண்டு படங்களில் லட்சுமணனாக நடிக்கும் வாய்ப்பை இழந்த நடிகர்
பாலிவுட்டில் அடுத்ததாக மிகப்பெரிய பட்ஜெட்டில் எதிர்பார்க்கப்படுவது ரன்பீர் கபூர் நடிப்பில் உருவாகி வரும் "ராமாயணா". இந்த படத்தில் ராமனாக நடிக்கும் ரன்பீர் கபூருக்கு தம்பியாக லட்சுமணன் கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு பாலிவுட் நடிகர் தேவ் சர்மா என்பவர் முதலில் ஆடிசனுக்கு அழைக்கப்பட்டிருந்தார். ஆனால் அவர் ரன்பீர் கபூரை விட இரண்டு அங்குலம் உயரமாக இருந்ததால் அந்த படத்தில் லட்சுமணன் வாய்ப்பு கைநழுவி போனதாம்.
அதேபோல இதே நடிகர்தான் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு பிரபாஸ் நடிப்பில் வெளியான "ஆதிபுருஷ்" படத்தில் ராமனாக நடித்த பிரபாஸின் தம்பி கதாபாத்திரத்தில் லட்சுமணன் ஆக நடிக்க ஆடிசன் சென்றிருந்தார். ஆனால் அங்கேயும் பிரபாஸ் போலவே இவரது உடல்வாகும் தோற்றமும் மிகப் பெரியதாக இருந்ததால் அந்த படத்தில் லட்சுமணன் கதாபாத்திரத்தில் இவரால் நடிக்க முடியவில்லை.
இப்படி இரண்டு பெரிய திரைப்படங்களில் தனக்கு வாய்ப்பு கைநழுவி போனது குறித்து மன வேதனையுடன் இருந்தார் தேவ் சர்மா ஆனால் எதிர்பாராத விதமாக தற்போது "மஹா காவ்யாஸ்ரீ ராமாயண கதா" என்கிற படத்தில் ராமர் கதாபாத்திரத்திலேயே நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறாராம் தேவ் சர்மா.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!