
தனது இரண்டாவது கர்ப்பம் குறித்து வேடிக்கையான வீடியோவை பகிர்ந்த தீபிகா படுகோனே!
தனது இரண்டாவது குழந்தையை எதிர்பார்க்கும் நடிகை தீபிகா படுகோனே, இரண்டாவது கர்ப்பத்தின்போது ஏற்படும் எதார்த்தமான நிலையை வெளிப்படுத்தும் ஒரு வேடிக்கையான வீடியோவை பகிர்ந்துள்ளார். பொதுவாக கர்ப்பிணிப் பெண்கள் எடையுள்ள பொருட்களைத் தூக்கக் கூடாது என்று அறிவுறுத்தப்பட்டாலும், இரண்டாவது முறை கர்ப்பமாக இருக்கும் தாய்மார்கள் தங்கள் முதல் குழந்தையைத் தூக்க வேண்டிய சூழல் ஏற்படுவது வழக்கம். இந்த அன்றாட சவாலை மிகச் சரியாக படம் பிடித்துக் காட்டும் வகையில், ஒரு பெண் தனது சிறு குழந்தையைத் தூக்கும் வீடியோவை தீபிகா தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரீஸில் பகிர்ந்துள்ளார்.
தனது தனிப்பட்ட வாழ்க்கையை ரகசியமாக வைப்பதற்கு தீபிகா, இதுபோன்ற இயல்பான தருணங்களை அவ்வப்போது பகிர்ந்து கொள்வது அவரது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
தனது இரண்டாவது குழந்தையை வரவேற்பதற்கு தயாராகி வரும் தீபிகா, தற்போது தனது முதல் குழந்தையான துவா என்ற பெண் குழந்தையுடன் நேரத்தைச் செலவிட்டு வருகிறார். அதோடு அட்லீ இயக்கத்தில் அல்லு அர்ஜூன் நடிக்கும் "ராக்கா" படத்தில் தனது காட்சிகளையும், ஷாருக்கானின் "கிங்" படத்திற்கான படப்பிடிப்பையும் ஏற்கனவே நிறைவு செய்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!