
ரன்வீர் சிங் - பூஜா ஹெக்டே நடித்துள்ள சர்க்கஸ் பட டிரைலர் வெளியீடு
டிச 03, 2022
விஜய்யுடன் நடித்த பீஸ்ட் படத்திற்கு பிறகு தெலுங்கில் சிரஞ்சீவி - ராம்சரண் நடித்த வெளியான ஆச்சாரியா படத்தில் நடித்திருந்தார் பூஜா ஹெக்டே. அடுத்தபடியாக ஹிந்தியில் ரன்வீர் சிங்குடன் இணைந்து பூஜா ஹெக்டே நடித்துள்ள சர்க்கஸ் படத்தின் டிரைலர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. ரோஹித் ஷெட்டி இயக்கி உள்ள இந்த படத்திற்கு தேவிஸ்ரீ பிரசாத் இசையமைத்திருக்கிறார். வருகிற டிசம்பர் 23ம் தேதி கிறிஸ்மஸ் பண்டிகைக்கு படம் திரைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மூன்று நிமிடங்கள் ஓடக்கூடிய இந்த டிரைலரில் சர்க்கஸ் மற்றும் காமெடி காட்சிகள் இடம் பெற்றுள்ளன. ரன்வீர் சிங் இரண்டு வேடங்களில் நடித்துள்ளார். பூஜா ஹெக்டே மற்றும் ஜாக்குலின் ஆகிய இருவரும் நாயகிகளாக நடித்துள்ளனர். தீபிகா படுகோனே இப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார்.
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement
















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!