தனது வாழ்க்கையை தானே படமாக இயக்கிய நடன இயக்குநர்
நவ 23, 2026
Advertisement
பாலிவுட்டின் முன்னணி நடன இயக்குனர் கணேஷ் ஆச்சார்யா. தமிழில், என் சகியே, வயசு பசங்க, ரவுத்திரம் உள்பட சில படங்களில் நடித்துள்ளார். சில படங்களுக்கு நடனம் அமைத்துள்ளார். பாலிவுட் நடிகர், நடிகைகள் அனைவரும் இவரது நண்பர்கள். பாலிவுட்டில் செல்வாக்கு படைத்தவர்களில் ஒருவராக இவரை குறிப்பிடுவார்கள்.
இவர் தன்னுடைய வாழ்க்கை கதையை "கணேஷ் : டஸ்ட்டு டு ஸ்டார் டஸ்ட்" என்ற பெயரில் அவரே இயக்கியுள்ளார். தனது திரைப் பயணத்தில் சந்தித்த சிரமங்கள், தியாகங்கள் மற்றும் சாதனைகளின் அடிப்படையில் இப்படத்தை உருவாக்கியுள்ளார். இப்படத்துக்குத் தணிக்கை வாரியம் யு சான்றிதழ் வழங்கியுள்ளது. டிச.11-ல் வெளியாகிறது.
படம் குறித்து கணேஷ் ஆச்சார்யா கூறும்போது, “நான் எப்படி என் பாதையை அமைத்துக் கொண்டேன் என்பதை சொல்வதுதான் இந்த படம். இது மற்றவர்களுக்கு ஊக்கமளிக்கும். கடினமாக உழைத்து வாழ்க்கையில் முன்னேறும் சாதாரண மக்களுக்கு இப்படம் உத்வேகமாக அமையும். இதில் என் வாழ்க்கை பயணத்தின் பல சிறந்த தருணங்கள் இடம்பெற்றுள்ளன” என்றார்.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
கருத்துகள் ஏற்றப்படுகின்றன…