
பிக்பாஸில் புதிய மாற்றம்: பொதுமக்களும் பங்கேற்கலாம்
தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியில் பெரிய மாற்றம் செய்யப்பட்டுள்ளது. சேனல் குழு தேர்வு செய்யும் குழுவுடன் பொதுமக்களும் கலந்து கொள்ள இருக்கிறார்கள். இதற்கான புரமோவை விஜய் டி.வி வெளியிட்டுள்ளது.
பிக்பாஸ் போட்டியில் கலந்துகொள்ள விரும்பும் பொதுமக்கள் தங்களுடைய சுய குறிப்போடு கூடிய ஒரு காணொளி காட்சியை பதிவு செய்து அதனை vijay.startv.com என்ற தளத்திற்கு சென்று பதிவேற்றம் செய்யுமாறு கூறப்பட்டுள்ளது. அந்த வீடியோவில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ப ஆர்வமாக இருப்பது ஏன்? என்ற கேள்விக்கு பதில் அளிக்குமாறும் கூறப்பட்டுள்ளது. 6வது சீசனில் 3 பேர் பொதுமக்களிடம் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர்களாக இருப்பார்கள் என்று சேனல் வட்டாரங்கள் தெரிவிக்கிறது.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!