தர்மேந்திரா உடன் மீண்டும் இணைந்து நடிக்கும் அர்பாஸ் கான்
ஜூன் 09, 2025
Advertisement
1998ல் வெளியான ஹிந்தி படம் ‛பியார் கியா டூ தர்ணா கயா". சல்மான் கான், இவரது சகோதரர் அர்பாஸ் கான், தர்மேந்திரா உள்ளிட்ட பலர் நடித்தனர். நீண்ட இடைவெளிக்கு பின் தர்மேந்திரா உடன் இணைந்து நடிக்கிறார் அர்பாஸ் கான். ‛மைனே பியார் கியா பிர் சே" என பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தை சபீர் ஷேக் இயக்குகிறார். பிபிசி மோஷன் பிக்சர்ஸ் பிரைவேட் லிமிடெட் தயாரிக்கிறது.
இந்த படத்தின் அறிமுக நிகழ்ச்சி மும்பையில் நடந்தது. அதில் தர்மேந்திரா, அர்பாஸ் கான், நடிகை வித்யா மாலவதே, உதித் நாராயண், திலீப் சென், ராஜ்பால் யாதவ், சோனு பகத், கணேஷ் ஆச்சார்யா, யோகேஷ் லக்கானி, கங்கனா சர்மா, தீபக் திஜோரி ஆகியோர் கலந்து கொண்டனர். திலீப் சென் இசையமைக்கிறார்.
தர்மேந்திரா கூறுகையில், ‛‛ "மைனே பியார் கியா பிர் சே" ஒரு கலவையான படம். எல்லா பொழுதுபோக்கு அம்சங்களும் நிறைந்துள்ளது. ரோனி ரோட்ரிக்ஸ் மற்றும் அவரது குழுவினருக்கு எனது வாழ்த்துக்கள். அர்பாஸ் கானுடன் முன்பு "பியார் கியா தோ தர்ணா கியா" படத்தில் பணியாற்றியது மகிழ்ச்சியாக இருந்தது. இப்போது இந்த புதிய படத்தில் மீண்டும் ஒன்றாக இணைந்திருப்பது மகிழ்ச்சி"" என்றார்.
"தர்மேந்திரா உடன் மீண்டும் பணியாற்ற வாய்ப்பு கிடைத்ததில் பெருமை கொள்கிறேன். படத்தின் கதை, வசனம் மற்றும் கதாபாத்திரங்கள் மிகவும் சிறப்பாக உள்ளன. இதில் நடிப்பதற்கு உற்சாகமாக இருக்கிறேன்" என்றார் அர்பாஸ்கான்.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!