அனிமல் படத்திலிருந்து அனில் கபூர் தோற்றம் வெளியானது
செப் 22, 2023
Advertisement
அர்ஜுன் ரெட்டி பட இயக்குனர் சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் நடிகர் ரன்பீர் கபூர் நடிப்பில் ரிலீஸ்க்கு தயாராகி வரும் திரைப்படம் "அனிமல்". ராஷ்மிகா மந்தனா, அனில் கபூர், பாபி தியோல் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். டி சீரியஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு ஹர்ஷவர்தன் ராமேஸ்வர் இசையமைக்கிறார். டிசம்பர் 1ம் தேதி அன்று ஹிந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் இப்படம் வெளியாகிறது.
இந்த படத்தின் டீசர் வருகின்ற செப்டம்பர் 28ம் தேதி காலை 10 மணி அளவில் வெளியாகும் என அறிவித்ததைத் தொடர்ந்து தற்போது இப் படத்திலிருந்து அனில் கபூர் தோற்றத்தை படக்குழுவினர்கள் வெளியிட்டுள்ளனர். இது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!