விஜய் பட நடிகைக்கு குஜராத்தில் கவுரவம்.. ஜார்கண்டில் சங்கடம்
மார் 04, 2021
பாலிவுட் நடிகை அமிஷா படேல் மும்பையை சேர்ந்தவர். தமிழில் விஜய் நடித்த புதிய கீதை படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தாரே, அதே அமிஷா படேல் தான். சில தினங்களுக்கு முன் அகமதாபாத்தில் நடைபெற்ற விழா ஒன்றில் கலந்துகொண்ட இவருக்கு "குஜராத்தின் உண்மையான கவுரவம்" என சான்றிதழ் வழங்கி கவுரவித்துள்ளனர்.
இவருக்கு வழங்கப்பட இந்த சான்றிதழை ரசிகர்கள் பலர் பார்க்க விரும்பியதால் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் அமிஷா படேல். அதேசமயம் தயாரிப்பாளர் அஜய் குமார் என்பவரிடம் 2.5 கோடி வாங்கிய அமிஷா படேல் அதை திருப்பி தரவில்லை என அவர் மீது தயாரிப்பாளர் வழக்கு தொடர்ந்துள்ளார் என்பதும், அதற்கு பிப்ரவரி மாதமே பதிலளிக்கும்படி ஜார்கண்ட் நீதிமன்றம் உத்தரவிட்டதும் தனிக்கதை. ஆனால் இந்த புகாரில் ஆதாரமில்லை என கூறியுள்ளார் அமிஷா படேல்.

Tags
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!