நடிகர் அக்ஷய் குமாருக்கு கொரோனா
ஏப் 04, 2021
Advertisement
கொரோனாவின் இரண்டாவது அலை எதிர்பார்த்ததை விட வேகமாக பரவி வருகிறது. திரைப்பிரபலங்கள் பலரும் இந்நோய்க்கு ஆளாகி வருகின்றனர். பாலிவுட் நடிகர் ஆமிர் கான், நடிகை ஆலியா பட் உள்ளிட்டோர் சமீபத்தில் இந்நோய் தொற்றுக்கு ஆளான நிலையில் இப்போது மற்றுமொரு முன்னணி நடிகரான அக்ஷய் குமாரும் இந்நோய் தொற்றுக்கு ஆளாகி உள்ளார்.
இதுகுறித்து டுவிட்டரில் அவர் பதிவிட்டதாவது : ‛‛இன்று(ஏப்., 4) காலை எனக்கு கொரோனா நோய் உறுதி செய்யப்பட்டது. கொரோனா விதிமுறைகளை பின்பற்றி உடனடியாக என்னை நானே வீட்டிலேயே தனிமைப்படுத்தி கொண்டேன். உரிய மருத்துவ சிகிச்சையும் பெற்று வருகிறேன். சமீபத்தில் என்னுடன் தொடர்பில் இருந்தவர்களும் தயவு செய்து பரிசோதனை செய்யும்படி கேட்டுக் கொள்கிறேன். விரைவில் இதிலிருந்து மீண்டு வருவேன்"" என தெரிவித்துள்ளார் அக்ஷய்.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!