ஹீரோ சைப் அலிகான், வில்லன் அக் ஷய் : ரகசியம் உடைத்த ஹைவான் டிரைலர்
ஆக 14, 2026
Advertisement
மலையாள இயக்குனர் பிரியதர்ஷன் கிட்டத்தட்ட தனது நூறாவது படத்தை இயக்கப் போகிறார். சில மாதங்களுக்கு முன்பு அக் ஷய் குமாரை வைத்து அவர் ஹிந்தியில் இயக்கிய பூத் பங்களா திரைப்படம் வெற்றியை பெற்றது. இதனை தொடர்ந்து மீண்டும் அக் ஷய் குமார் மற்றும் சைப் அலிகான் ஆகியோரை வைத்து அவர் இயக்கியுள்ள ஹைவான் திரைப்படம் வரும் செப்டம்பர் 11 அன்று ரிலீஸ் ஆக இருக்கிறது. இந்த படம் ஏற்கனவே மலையாளத்தில் பிரியதர்ஷன் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் வெளியான ஒப்பம் திரைப்படத்தின் ரீமேக் ஆகத்தான் உருவாகி இருக்கிறது.
அதில் மோகன்லால் பார்வையற்ற மாற்றுத்திறனாளி கதாபாத்திரத்தில் கதாநாயகனாகவும், சமுத்திரக்கனி வில்லனாகவும் நடித்திருந்தனர். படத்தில் அக் ஷய் குமார், சைப் இருவரும் நடித்திருந்தாலும் யார் ஹீரோ, யார் வில்லன் என இதுநாள் வரை ஒரு சஸ்பென்ஸ் இருந்தது. தற்போது வெளியாகியுள்ள டிரைலர் மூலம் மோகன்லால் கதாபாத்திரத்தில் சைப் அலிகானும், அக் ஷய் குமார் வில்லன் கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர் என்பது உறுதியாகி உள்ளது.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!