தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :சர்பிரா காப்பாற்றுமா ?
ஏப் 19, 2024
Advertisement
பாலிவுட்டின் முன்னணி நடிகர்களில் ஒருவர் அக்ஷய் குமார். ஒரு காலத்தில் தொடர்ந்து சூப்பர் ஹிட் படங்களைக் கொடுத்தவர். ஆனால், தற்போது தொடர் தோல்வியில் தவித்து வருகிறார். அக்ஷய் குமார், டைகர் ஷெராப், பிருத்விராஜ், மனுஷி சில்லர் மற்றும் பலர் நடித்து கடந்த வாரம் வெளிவந்த "படே மியான் சோட்டோ மியான்" படம் எதிர்பார்த்த அளவு வரவேற்பைப் பெறவில்லை. சுமார் 350 கோடி செலவில் தயாரிக்கப்பட்ட படம் 7 நாட்களுக்குப் பிறகு 100 கோடியை நெருங்குவதாகச் சொல்கிறார்கள். இன்னும் 200 கோடி வசூலித்தால் கூட படம் லாபம் தர வாய்ப்பில்லையாம்.
பாலிவுட்டில் அக்ஷய் தொடர்ந்து தோல்விகளையே தந்து கொண்டிருக்கிறார். "காஞ்சனா" படத்தின் ஹிந்தி ரீமேக்கான "லட்சுமி"யில் ஆரம்பமானது அவரது தோல்வி. அதன் பின் வந்த 10 படங்களுமே தோல்விப் படங்கள்தான். இருந்தாலும் கைவசம் ஐந்தாறு படங்களை வைத்துள்ளார் அக்ஷய்.
அவரது அடுத்த வெளியீடாக ஜுலை மாதம் 12ம் தேதி "சர்பிரா" படம் வெளியாக உள்ளது. தமிழில் சூர்யா நடித்த "சூரரைப் போற்று" படத்தின் ஹிந்தி ரீமேக்தான் இந்தப் படம். இப்படமாவது அவரைக் காப்பாற்றுமா என்று அவரது ரசிகர்கள் சோகத்தில் மூழ்கியுள்ளார்கள்.

Tags
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!