
அடுத்தடுத்து தோல்விகளால் தவிக்கும் அக்ஷய்குமார்
அக்ஷய்குமார் நடித்து கடைசியாக வெளிவந்த ஆறு படங்கள் தோல்வியைத் தழுவியுள்ளன. அந்தத் தோல்வியை ஆரம்பித்து வைத்த படம் "லட்சுமி". தமிழில் வெளிவந்த "காஞ்சனா" படத்தின் ரீமேக்தான் இந்தப் படம். இதற்கடுத்து அவர் நடித்து வெளிவந்த "பெல்பாட்டம், சூர்யவன்ஷி, அன்த்ராங்கி ரே (ஓடிடி), பச்சன் பாண்டே" ஆகிய படங்கள் தோல்வியைத் தழுவின. அந்த வரிசையில் சமீபத்தில் வெளிவந்த "சாம்ராட் பிருத்விராஜ்" படமும் இடம் பிடித்துள்ளது.
ஓடிடியில் வெளியான படம் தவிர மற்ற படங்கள் வியாபார ரீதியில் வசூலைத் தராமல் தோல்வியைத் தழுவிய படங்கள். இருப்பினும் அக்ஷய்குமார் தொடர்ந்து சில படங்களைத் தன் கைவசம் வைத்திருக்கிறார். அப்படங்கள் அவரை மீட்டெடுக்குமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
தென்னிந்தியாவில் இருந்து ஹிந்திக்குச் சென்று வசூலைக் குவித்த "புஷ்பா, ஆர்ஆர்ஆர், கேஜிஎப் 2" ஆகிய படங்கள் பாலிவுட் ரசிகர்களின் கண்ணோட்டத்தை மாற்றிவிட்டதாக பாலிவுட்டினர் யோசிக்கிறார்களாம்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!