
கங்குபாய் காத்தியவாடி பார்த்து கண்ணீர்விட்ட அல்போன்ஸ் புத்ரன்
இதுகுறித்து அவர் கூறும்போது, “இந்த படத்தை பார்த்தேன்.. சஞ்சய் லீலா பன்சாலி தெறிக்க விட்டுள்ளார்.. நான் விருது தேர்வுக்குழு நடுவராக இருந்தால் இந்த படத்திற்கு 100 மதிப்பெண்களும், இயக்குனர் சஞ்சய் லீலா பன்சாலிக்கு 100 மதிப்பெண்களும் ஆலியா பட்டுக்கு 100 மதிப்பெண்களும் நிச்சயமாக கொடுப்பேன்.. பல இடங்களில் இந்த படம் என்னை அழ வைத்து விட்டது.. நிஜ கங்குபாய் மீது மரியாதை ஏற்படுகிறது.. ஒரு சினிமா நடிகையாக வேண்டும் என்று வந்தவர் ஒரு முழு படமாகவே மாறிவிட்டார். படக்குழுவினருக்கு என் அன்பும் வாழ்த்துக்களும்.. குறிப்பாக அஜய் தேவ்கனின் அற்புதமான நடிப்புக்கும்..” என்று கூறியுள்ளார் அல்போன்ஸ் புத்ரன்

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!