
83 டிரைலருக்கு வரவேற்பு
நவ 30, 2021
Advertisement
கபீர்கான் இயக்கத்தில் ரன்வீர் சிங், ஜீவா, தீபிகா படுகோன் நடிப்பில் உருவாகி உள்ள படம் ‛83". கபில் தேவ் தலைமையிலான இந்திய அணி 1983ல் உலக கோப்பை வென்றதை தழுவி இப்படம் எடுக்கப்பட்டுள்ளது. ஹிந்தி மற்றும் தென்னிந்திய மொழிகளில் வெளியாக உள்ள இப்படத்தின் டிரைலரை நேற்று வெளியிட்டனர். இதற்கு ரசிகர்களிடம் வரவேற்பு கிடைத்துள்ளது. குறிப்பாக படத்தில் நடித்துள்ள ஒவ்வொரு கேரக்டரும் நிஜத்தில் உள்ள கேரக்டர்களை அப்படியே பரதிபலிக்கின்றன. அதிலும் கபில்தேவ்வாக நடித்துள்ள ரன்வீர் சிங், ஸ்ரீகாந்த்தாக நடித்துள்ள ஜீவாவின் கேரக்டர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. ஒவ்வொரு மொழியிலும் தனித்தனியாக டிரைலரை வெளியிட்டுள்ளனர். மற்ற மொழிகளை காட்டிலும் ஹிந்தி பட டிரைலருக்கு 1.5 கோடிக்கும் அதிகமான பார்வைகள் கிடைத்துள்ளன. 83 படம் டிச.,24ல் 3டியில் இந்த படம் 5 மொழிகளில் வெளியாகிறது.
Tags
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!