விமர்சனம்
அ நிறம் | அளவு
புகழ், அஷ்வின், இந்திரன், திரு ஆகிய நாலு நண்பர்களும் பிக்பாக்கெட் திருடர்கள். கொரோனா காலத்தில் பணத்துக்கு கஷ்டப்படுகிறார்கள். ஜாக்பாட் அடிப்பது மாதிரி அவர்களுக்கு ஒரு தகவல் கிடைக்கிறது. கடற்கரையொட்டி இருக்கிற, ஆள் இல்லாத பிரமாண்டமான பங்களாவில் கோடிக்கணக்கான பணம் இருக்கிறது. அதை திருடினால் நமக்குள் பங்கு பிரிக்கலாம் என அங்கே இருக்கும் வாட்ச்மேன் ரவிமரியா டீல் பேசுகிறார். அதை நம்பி அங்கே சென்றால், அவர்களின் உடல் உறுப்புகளை திருட திட்டம் தீட்டுகிறார் அந்த பங்களா ஓனர், டாக்டரான வின்சன்ட் அசோகன். அதற்கு ஆள் பிடித்துகொடுக்கிறார் ரவிமரியா. அந்த பங்களாவில் சிக்கிய நண்பர்கள் தப்பித்தார்களா? அங்கே நடக்கும் வேறு மர்மமான விஷயங்கள் என்ன என்பது 4 இடியட்ஸ் கதை.
பணத்துக்கு ஆசைப்பட்டு, ஒரு பங்களாவில் சிக்கி தவிக்கும் நாலு நண்பர்கள் கதை. எத்தனையோ படங்களில் பார்த்ததுதான். என்ன, உடல் உறுப்பு திருட்டு, ஆபரேசன், சஸ்பென்ஸ் கலந்து கொடுத்து இருக்கிறார் இயக்குனர். படத்தை சீரியஸ் ஆக கொண்டு செல்லாமல், முழுக்க முழுக்க காமெடியில் கதையை நகர்த்தி இருக்கிறார்கள்.
புகழ் அண்ட் நண்பர்கள் டீம் அட்ராசிட்டியுடன் படம் தொடங்குகிறது. அந்த பங்களாவுக்கு செல்வது, ரவிமரியா ஆசை வார்த்தையில் ஏமாறுவது, அவர் பிளான் தெரிந்து கதறுவது, தப்பிக்க பிளான் போடுவது அதில் ஏற்படும் பிரச்னைகள் என கதை பரபரப்பாகிறது. கடைசியில் சில திருப்பங்களுடன் கதை முடிகிறது. கிட்டத்தட்ட புகழ் தான் கதை நாயகன்.ஆனால் அவரோ சீரியஸ் ரோல், காமெடி என இரண்டிலும் சொதப்பி இருக்கிறார். குறிப்பாக சீரியஸ் ரோல், அவர் பேசும் டயலாக் செட் ஆகவில்லை. காமெடியும் பெரும்பாலான இடங்களில் வொர்க் அவுட் ஆகவில்லை. அவர் நண்பராக வரும் அஷ்வின் சில இடங்களில் சிரிக்க வைக்கிறார். அவர் அப்பாவிதனம் கலந்த நடிப்பு படத்துக்கு பிளஸ். மற்றவர்கள், காமெடி என்ற பெயரில் இஷ்டத்துக்கு பேசிக்கொண்டே இருக்கிறார்கள்.
அந்த பங்களா வாட்ச்மேன் ஆக,ரவுடி ஆக வரும் ரவிமரியா படம் முழுக்க வருகிறார். ஆனால் இம்சை தருகிறார். பெரும்பாலான சீ்ன்களில் கத்திக்கொண்டே நடித்து கொட்டுகிறார்.அவர் கெட் அப், ஓவர் ஆக்டிங் நம்மை டென் ஷன் ஆக்குகிறது. இனி வரும் காலங்களில் ரவிமரியா தன்னை மாற்றிக்கொள்வது அவருக்கு நல்லது.
படத்தின் பெரும்பகுதி அந்த பங்களாவிற்குள் நடக்கிறது. அதை சலிப்பை உண்டாக்குகிறது. போன் அடிக்கிற காட்சி, போனில் பேசுகிற காட்சிகள் இன்னும் சினிமாதனம். ஹீரோயினாக பிரக்யா நயன் வருகிறார். அவரை முதலில் ஒரு குத்துபாடலில் ஆட வைத்து இருக்கிறார்கள். அடுத்து அந்த பங்களாவில் வேலை பார்க்கும் வேலைக்காரி என்கிறார்கள். அவர் கேரக்டர் போலீஸ் ஆக மாறுகிறது, அடுத்து இன்னொரு டுவிஸ்ட், ஷ் முடியலை சாமி.
4 நண்பர்கள், ரவிமரியா, வின்சென்ட் அசோகனை சுற்றியே கதை நகர்கிறது. முதற்பாதியில் துாக்கம் வந்தால், பிற்பாதியில் கோபம் வருகிறது. அந்த அளவுக்கு திரைக்கதை வீக், உடல்உறுப்பு திருட்டு, பங்களாவில் மாட்டிக்கொண்டு தவிப்பது என ஏகப்பட்ட கதைகள் வந்த நிலையில் இதில் பெரிய புதுமை இல்லை. கிளைமாக்ஸ் கூட சுமார்தான். பல படங்களில் அழகான காட்சிகளை கொடுத்த ஒளிப்பதிவாளர் யு.கே.செந்தில் குமார், இசையமைப்பாளர் சுபாஷ்முனிரத்னம் கூட கதைக்கு உருப்படியாக எதையும் செய்யவில்லை.
கதை, திரைக்கதை, வசனம் என எதிலும் நேர்த்தி இல்லை. சீனுக்கு சீன் கத்திக்கொண்டே இருப்பதும், சண்டைபோடுவதும், சம்பந்தம் இல்லாமல் டயலாக் பேசுவதும் எப்படி காமெடியில் சேரும், சிரிப்பை உண்டாக்கும். அன்பே சிவம், கோகுலத்தில் சீதை, உன்னிடத்தில் என்னை கொடுத்தேன், பிரியமுடன் போன்ற பல வெற்றி படங்களை கொடுத்த லட்சுமிமூவிமேக்கர்ஸ் உருவாக்கிய படமா இது என சந்தேகம் வருகிறது
4 இடியட்ஸ் - புகழ் இருந்தும் சிரிப்பு வராத காமெடி படம்

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!