விமர்சனம்
அ நிறம் | அளவு
தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் எந்தவிதமான காதல் கதைகளையும் ரசிகர்கள் ஓரளவிற்கு ரசித்துப் பார்த்தார்கள். ஆனால், சில விதமான காதல் கதைகள் போகப் போக ரசிகர்களுக்குப் போரடித்துவிட்டன. அப்படியான ஒரு கதையைத்தான் இந்தப் படத்தில் கொடுத்திருக்கிறார்கள்.
பள்ளியில் படிக்கும் மாணவன், மாணவி இருவரிடைய, அறியாத வயதில், புரியாத மனதில் காதல் என்பதெல்லாம் தற்போது மக்களிடம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இப்படிப்பட்ட காதல் கதைகளைப் பார்த்து சிறுவர், சிறுமியர் கூட கெட்டுப் போகும் அளவிற்கு உள்ளது என்பதுதான் பலரது கருத்து. சாதி மீறிய காதல் என காரணத்தைச் சொல்லி இந்தப் படத்தில் அப்படியான ஒரு பள்ளிக் காதலைச் சொல்லி இருக்கிறார் இயக்குனர் மனோஜ் கே பாரதிராஜா.
பெற்றோர் இறந்து போய்விட்டதால் தாத்தா பாரதிராஜாவால் வளர்க்கப்படுகிறார் ரக்ஷனா. பள்ளியில் முதல் மாணவியாக இருப்பவர். அவருடைய பள்ளியில் நன்றாகப் படிக்கும் மற்றொரு மாணவர் ஷியாம் செல்வன். ரக்ஷனா, ஷியாம் செல்வன் இருவரும் வெவ்வேறு சாதியைச் சேர்ந்தவர்கள். இருவருக்கும் காதல் வருகிறது. தனது தாத்தாவிடம் காதலைச் சொல்கிறார் ரக்ஷனா. அதைக் கேட்ட அவரும் கல்லூரி சென்று படித்து முடித்த பின் திருமணம் செய்து வைப்பதாகக் கூறுகிறார். மூன்று ஆண்டுகள் கழித்து ஊருக்குத் திரும்பி வருகிறார். ஆனால், ஷியாம் குடும்பத்தினர் அந்த ஊரிலேயே இல்லை. அவர்கள் எங்கே போனார்கள் எனத் தேட ஆரம்பிக்கிறார் ரக்ஷனா. இதன் பின் என்ன நடக்கிறது என்பதுதான் படத்தின் மீதிக் கதை.
கடந்த சில வருடங்களில் வரும் தமிழ்ப் படங்களில் காதலர்களுக்கு எதிர்ப்பாக இருக்கும் அதே சாதி விஷயத்தைத்தான் இந்தப் படத்திலும் கையாண்டிருக்கிறார்கள். ஆனால், அதிர்ச்சியைத் தரக் கூடிய ஒரு கிளைமாக்ஸை வைத்துவிட்டு அதன் தாக்கம் நம் மனதில் அழுத்தமாகப் பதியாதபடி சொல்லியிருக்கிறார்கள்.
புதுமுகங்கள் ஷியாம் செல்வன், ரக்ஷனா பள்ளி மாணவன், மாணவியாக நடித்திருக்கிறார்கள். ஷியாமை விட ரக்ஷனாவுக்குத்தான் படத்தில் காட்சிகளும், முக்கியத்துவமும் அதிகமாக இருக்கின்றன. அவரும் முதல் பட நாயகி போலில்லாமல் சமாளித்து நடித்திருக்கிறார். கொடுத்த கதாபாத்திரத்தை சரியாகச் செய்ய முயற்சித்திருக்கிறார் புதுமுக நடிகர் ஷியாம் செல்வன்.
தாத்தா கதாபாத்திரத்தில் பாரதிராஜா, யோசித்து யோசித்துப் பேசி நடிக்கிறார். வில்லனாக ஒரு சில காட்சிகளில் வந்து போகிறார் சுசீந்திரன். ரக்ஷனாவின் தோழியாக நக்ஷா.
இளையராஜா அவருடைய முந்தைய படங்களின் இசையை ஞாபகப்படுத்துகிறார்.
ஒரு வரியில் சொல்லக் கூடிய ஒரு கதையத் தேர்வு செய்து, அதை இவ்வளவு நீட்டி முழக்கி சொல்லியிருக்கத் தேவையில்லை.
மார்கழி திங்கள் - பனி மூட்டம்

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!