கணேஷ் ஆச்சார்யா, மணீந்தர், நுபுர் சர்மா
டைரக்டர் : அஜய் சாந்தோக்
தயாரிப்பாளர் : விதி ஆச்சார்யா
காமெடி - ஆக்ஷன் படமாக உருவாகி உள்ளது ஹேய் ப்ரோ படம். முன்னணி நடனக்கலைஞரான கணேஷ் ஆச்சார்யா, இப்படத்தின் மூலம், பாலிவுட்டில் நடிகராக அறிமுகமாகியுள்ளார். இந்த படத்தின் பாடல் ஒன்றில், அமிதாப் பச்சன், ஹிருத்திக் ரோஷன், அக்ஷய் குமார், அஜய் தேவ்கன், ரன்வீர் சிங், பிரபுதேவா மற்றும் கோவிந்தா சிறப்புத்தோற்றங்களில் நடித்துள்ளனர். இனி படம் குறித்து பார்ப்போம்....
கோபி கேரக்டரில் நடி்ததுள்ள கணேஷ் ஆச்சார்யா, தான் செல்லும் வழியில், இரட்டையர்களில் ஒருவரான ஷிவ் (மணீந்தர்)வை கண்டெடுக்கிறார். இந்த விவகாரம், போலீஸ் ஸ்டேசன் வரை செல்கிறது. அதன்பிறகு, கணேஷ் ஆச்சார்யாவின் வாழ்க்கையில் ஏற்படும் மாற்றங்களே படத்தின் மீதிக்கதை...
படத்தின் தெளிவற்ற திரைக்கதையால், அஜய் சாந்தோக்கின் இயக்கமும் சொல்லிக்கொள்ளும்படியாக இல்லை. கற்பனைத்திறன் அற்ற படத்தை எவ்வாறு எடுக்கலாம் என்பதற்கு இந்த படமே உதாரணம். படத்தின் பின்னணி இசை மற்றும் பாடல்கள், படம் பார்ப்பவர்களை எரிச்சலைடயவே செய்கிறது. எடிட்டிங் மற்றும் ஒளிப்பதிவு சுமார் ரகம். கதையில் ஒரு ஸ்திரத்தன்மை இல்லாதது மற்றும் திரைக்கதை குழப்பும்விதமாக உள்ளது. படத்தின் வசனங்கள், படம் பார்ப்போரை தூங்க வைத்துவிடுகின்றன.
படத்தின் கேரக்டர்கள், படம் பார்ப்பவர்களை, எவ்வளவு சோதிக்க முடியுமோ, அவ்வளவு சோதிக்கின்றன. கணேஷ் ஆச்சார்யா மட்டும் இதற்கு விதிவிலக்கு. மற்ற அனைத்து கேரக்டர்களையும் ஒருங்கிணைக்கும் முயற்சியில், கணேஷ் ஆச்சார்யா தோல்வியையே தழுவி இருக்கிறார். படம் பார்ப்பவர்களை சோதிப்பதில், போட்டி போட்டுக்கொண்டு ஒவ்வொரு கேரக்டர்களும் நடித்துள்ளன.
ஹேய் ப்ரோ, குழந்தைகள் மட்டுமல்ல, எல்லா வயதினரும் தவிர்க்க வேண்டிய படம்
ஸ்டார் : 1/5