Birthday
26 May 1943 (Age )
தமிழ் சினிமாவின் ஆச்சி என்று எல்லோராலும் அழைப்படுபவர் நடிகை மனோரமா. தமிழ் சினிமாவில், ஏன் இந்திய சினிமாவிலேயே காமெடியில் கொடி கட்டி பறந்த நடிகை என்றால் அது மனோரமா என்றே சொல்லலாம். காமெடி மட்டும் அல்லாது பல்வேறு குணச்சித்திர வேடங்களில் இதுவரை 1000 படங்களுக்கு மேல் நடித்து விட்டார்.
1943ம் ஆண்டு, மே 26ம் தேதி, தஞ்சை மாவட்டம், மன்னார்குடியில் பிறந்தவர் மனோரமா. சிறுவயது முதலே நாடகங்களில் அலாதி பிரியம் கொண்டவர். வைரம் நாடகம் சபாவில் சின்ன சின்ன வேடங்களில் நடித்து வந்த மனோரமா, பின்னர் எஸ்.எஸ்.ராஜேந்திரன் மூலமாக எஸ்.எஸ்.சுர்.நாடக கம்பெனியில் இணைந்தார். அங்கு 100க்கும் மேற்பட்ட நாடகளில் நடித்து புகழ்பெற்றவர், 1958ம் ஆண்டு மாலையிட்ட மங்கை படத்தின் மூலம் தனது சினிமா பயணத்தை தொடங்கினார். கொஞ்சும் குமரி, மனோரமாவை தமிழ் சினிமாவுக்கு அடையாளம் காட்டியது. அப்படியே படிப்படியாக நடிக்க தொடங்கியவர் எம்.ஜி.ஆர்., சிவாஜி, ஜெமினி உள்ளிட்ட அந்தக்கால நடிகர்கள் தொடங்கி, ரஜினி, கமல், அஜித், விஜய், சூர்யா, தனுஷ், சிம்பு என இன்றைய இளம் நடிகர்களின் படங்கள் உட்பட 1000க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துவிட்டார்.
வயது முதிர்வு மற்றும் உடல்நலக் குறைவால் சமீபகாலமாக படங்களில் நடிப்பதை குறைத்துவிட்டார். ஆனாலும் அவ்வப்போது சில படங்களில் நடித்து வருகிறார்.
தமிழ் சினிமாவின் ஆச்சிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்!