Advertisement

மதுபாலா

Birthday
26 Mar 1972 (Age )

1972ம் ஆண்டு மார்ச் 26ம் தேதி பிறந்தவர் மதுபாலா. இயக்குநர் பாலசந்தரின் அறிமுகம். அழகன் படத்தில் சுட்டி தனமான பொண்ணாக நடித்து அனைவரையும் கவர்ந்த மதுபாலா, ரோஜா, ஜென்டில்மேன் போன்ற படங்களில் நடித்து தமிழ் ரசிகர்களை கவர்ந்தார். தமிழ் மட்டுமல்லாது, தெலுங்கு, மலையாளம், கன்னடம் மொழிகளிலும் நடித்துள்ளார். தென்னிந்தியாவையும் தாண்டி இந்தியிலும் நடித்து பிரபலமானார் மது என்ற மதுபாலா.

மதுபாலா நடிகைகள் ஹேமமாலினி மற்றும் ஜூகி சாவ்லாவின் உறவினர் ஆவார். 1999ம் ஆண்டு ஆனந்த் ஷா என்பவரை திருமணம் செய்து கொண்டு சினிமாவுக்கு முழுக்கு போட்டார். இரண்டு குழந்தைகளுக்கு தாய் ஆன பின்னர் இப்போது மீண்டும் சினிமாக்களில் தலை காட்ட துவங்கியுள்ளார்.