மலையாளம் மற்றும் தமிழ் படங்களின் பிரபல நடிகர் முரளி. கேரள மாநிலம், கொல்லம் அருகேயுள்ள குடவட்டூர் என்ற ஊரில், 1954ம் ஆண்டு, மே மாதம் 25ம் தேதி பிறந்தவர் முரளி. கல்லூரி படிப்பை முடித்துவிட்டு சிலகாலம் கிளார்க்காக பணியாற்றிய முரளி, நிஜட்டடை என்ற படத்தில் அறிமுகமானார். ஆனால் அந்தப்படம் ரிலீஸாகவே இல்லை. அதன்பின்னர் சிதம்பரம் என்ற படத்தில் நடித்தார். அப்படியே படிப்படியாக பல படங்களில் நடித்து பேசப்படும் நடிகரானார். மலையாளம் மட்டுமல்லாது டும் டும் டும், ராம், மஜா, பொல்லாதவன், ஆதவன், அரசு உள்ளிட்ட நிறைய தமிழ் படங்களிலும் நடித்துள்ளார். நடிகராக மட்டுமல்லாது இரண்டு படங்களையும் தயாரித்துள்ளார். நெய்துக்காரன் என்ற மலையாள படத்திற்காக தேசிய விருதும் பெற்றுள்ளார். இதுதவிர கேரள மாநில அரசின் விருதுகள் உள்ளிட்ட பல விருதுகளை பெற்றுள்ளார். இவருக்கு மனி என்ற மனைவியும், கார்த்திகா என்ற மகளும் உள்ளனர்.