கேரளாவை பிறப்பிடமாக கொண்ட சந்தியாவின் உண்மையான பெயர் ரேவதி. காதல் படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்குள் வந்தவர். ள்ளி படிக்கும் போதே படிக்க வந்து விட்ட இவர் தொடர்ந்து டிஸ்யூம், வல்லவன், நேற்று இன்று நாளை, கூடல்நகர், தூண்டில், வெள்ளத்திரை உள்ளிட்ட பல தமிழ் படங்களில் நடித்துள்ளார். தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் நடித்துள்ள சந்தியா, வேட்டையாடு விளையாடு படத்தில் மஞ்சள் வெயில் பாடலுக்கு பின்னணியும் பாடியுள்ளார்.