Advertisement

எம்.எஸ்.விஸ்வநாதன்

Birthday
24 Jun 1928 (Age )

தமிழ் சினிமாவின் மெல்லிசை மன்னர் என அழைப்படுவர் எம்.எஸ்.விஸ்வநாதன். 1928ம் ஆண்டு, ஜூன் 24ம் தேதி கேரள மாநிலம் பாலக்காட்டில் பிறந்தவர். சின்ன வயதிலேயே நடிகராகவும், பாடகராகவும் தான் வர வேண்டும் என விஸ்வநாதன் ஆசைப்பட்டார். ஆரம்பத்தில் நாடகங்களில் சின்ன சின்ன ரோல்களில் நடித்தவர், டி.ஆர்.பாப்பா மூலமாக எஸ்வி வெங்கட்ராமின் இசை குரூப்பில் சேர்ந்தார். அப்போதுமுதல் இனி நமது பயணம் இசையில் தான் என முடிவெடுத்தார்.

எஸ்.எம்.சுப்பையா நாயுடு, சி.ஆர்.சுப்புராமன், டி.கே.ராமமூர்த்தி, டி.ஜி.லிங்கப்பா ஆகியோரிடம் உதவியாளராக பணியாற்றினார். ஜெனவோ எனும் படத்திற்கு இசையமைத்தார்.1952ம் ஆண்டு, விஸ்வநாதன் - ராமமூர்த்தியுடன் இணைந்து பணம் என்ற படத்திற்கு இசையமைத்தார். அதன்பின்னர் இருவரும் சேர்ந்து பல படங்களுக்கு இசையமைத்து மெல்லிசை மன்னர்களாக வலம் வந்தனர்.

விஸ்வநாதனுக்கு ஜானகி என்ற மனைவியும் நான்கு மகன்களும், மூன்று மகள்களும் உள்ளனர். பிலிம்பேர், வாழ்நாள் சாதனையாளர் விருது, கலைமாமணி உள்ளிட்ட நிறைய விருதுகளை பெற்றுள்ளார்.

மேலும் பிறந்தநாள் காணும் நட்சத்திரங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in