பிரபல தயாரிப்பாளர் மாதம்பட்டி சிவக்குமாரின் மகன் சத்யன் சிவக்குமார். 1975ம் ஆண்டு ஜூன் 11ம் தேதி கோவை மாவட்டத்தில் பிறந்தவர் சத்யன். சின்ன வயதில் இருந்தே சினிமாவில் ஆர்வம் கொண்டு இளையவன் என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். ஆனால் இந்தப்படம் ப்ளாப்பானது. ஹீரோ நமக்கு ஒத்துவராது என்று எண்ணி காமெடி கேரக்டரில் நடிக்க தொடங்கினார். மன்மதன், அருள், மகா நடிகன், கோவில் என பல படங்களில் குணச்சித்திர வேடத்தில் நடித்தார். ஆனால் மாயாவி தான் அவரை அடையாளம் காட்டியது. அதன்பின்னர் அவர் நடித்த படங்கள் எல்லாமே அவருக்கு ஒரு அடையாளத்தை கொடுத்தது. குறிப்பாக நண்பன் படம், சத்யனை வித்தியாசமான காமெடி ஆர்ட்டிஸ்ட்டாக அவரை வௌிச்சம் காட்டியது. தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார் சத்யன்.