த்ரிஷா — புகைப்படங்கள், படங்கள், சுயவிவரம் | தினமலர் சினிமா
Advertisement
Advertisement
த்ரிஷா
🎂04 May 1983· 43 years
12
🎬Films
50
📷Photos
43
🎂Age
பற்றி
தமிழ், தெலுங்கு இரண்டு மொழிகளிலும், 10 ஆண்டுகளுக்கு மேலாக சினிமாவில் நீடித்து வருபவர் நடிகை த்ரிஷா. 1983ம் ஆண்டு, மே மாதம் 04ம் தேதி பிறந்த த்ரிஷாவுக்கு, பூர்வீகம் கேரளா என்றாலும் அவர் பிறந்து, வளர்ந்தது எல்லாமே சென்னை தான். இவரது பெற்றோர் கிருஷ்ணன் - உமா தம்பதியர் ஆவர். 1999ம் ஆண்டு மிஸ் சேலம் மற்றும் மிஸ் சென்னை பட்டம் வென்ற த்ரிஷா, ஆரம்ப காலத்தில் மாடலிங் துறையில் பணியாற்றினார். பின்னர் ஜோடி உள்ளிட்ட சில படங்களில் சப்போர்ட்டிங் ஆர்ட்டிஸ்ட்டாக நடித்த த்ரிஷா, மௌனம் பேசியதே படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். தொடர்ந்து சாமி, கில்லி போன்ற படங்கள் சூப்பர் ஹிட் படங்களாக அமைய தமிழ் சினிமாவின் நம்பர்-1 நடிகையாக உயர்ந்தார். தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு சினிமாவில் நம்பர்-1 நடிகையாக வலம் வந்தார். த்ரிஷாவிற்கு நாய்கள் என்றால் உயிர். தெருவோரம் ஆதரவற்ற கிடக்கும் நாய்களை கண்டுவிட்டால் போதும் அதை உடனடியாக தனது வீட்டிற்கு சென்று வளர்த்து பராமரிப்பார். விலங்குகள் நல அமைப்பான பீட்டாவின் தூதராகவும் இருக்கிறார் த்ரிஷா.