போர் சூழல் : டாக்சிக் ரிலீஸ் ஜூன் 4ம் தேதிக்கு தள்ளி வைப்பு | ‛காற்றின் மொழி' இசையில்.... : ‛மெலோடி கிங்' வித்யாசாகர் பாடல்களை மறக்க முடியுமா? | பிளாஷ்பேக்: ராஜாஜி பாராட்டிய சிவாஜிகணேசன் | சிகரெட், மதுவை தொட்டதில்லை: சதீஷ் பெருமிதம் | ஆந்தாலஜி கதையில் உருவாகும் 'வவ்வல்ஸ்' | 40 படங்களில் போலீசாக நடித்த சமுத்திரக்கனி | விதார்த்தின் புதிய படம் 'தொடக்கம்' | பிளாஷ்பேக்: சிரஞ்சீவிக்கு கொடுத்த வாக்கை 9 வருடங்களுக்கு பிறகு காப்பாற்றிய பாரதிராஜா | ஏஆர் ரஹ்மானின் தெலுங்கு 'பெத்தி' பாடல் புதிய சாதனை | பிளாஷ்பேக்: கடன் பற்றி எச்சரித்த முதல் படம் |

சின்னத்திரை நடிகை ரித்திகா தமிழ்செல்வி விஜய் டிவியின் 'பாக்கியலெட்சுமி' தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். ரித்திகாவும் விஜய் டிவியின் கிரியேட்டிவ் ப்ரொடியூசர் வினுவும் ஒருவரையொருவர் காதலித்து வந்த நிலையில், கடந்த நவம்பர் மாதம் இருவருக்கும் திருமணம் நடந்தது. திருமணத்திற்கு பிறகு ஹினிமூனுக்காக ரித்திகா கணவருடன் மாலத்தீவுக்கு சென்றுவிட்டார். இதன்காரணமாக 'பாக்கியலெட்சுமி' தொடரிலிருந்து ரித்திகா விலகிவிட்டார் என்றும், இனி அந்த கதாபாத்திரத்தில் வேறு நடிகை தான் நடிப்பார் என்றும் தகவல்கள் வெளியாகி வந்தன. ஆனால், அதேசமயம் ரித்திகாவோ, சீரியல் குழுவோ அதுபோன்ற எந்த தகவலையும் வெளியிடவில்லை. இந்நிலையில், ஹினிமூனை முடித்துக்கொண்டு இந்தியா திரும்பியுள்ள ரித்திகா பாக்கியலெட்சுமி சீரியலில் மீண்டும் இணைந்துள்ளார். மேலும், ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுத்துக்கொண்ட, வீடியோவையும் புகைப்படங்களையும் தனது இண்ஸ்டாகிராமில் பகிர்ந்து இதை உறுதிசெய்துள்ளார். ரித்திகா மீண்டும் சீரியலில் இணைந்துள்ளதால் அவரது ரசிகர்கள் பலரும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.




