
ஜி.பி.முத்துவை பாராட்டிய சீனுராமசாமி : தீபாவளியின் வெற்றிநாயகன் என புகழாராம்
இந்நிலையில், யாரும் எதிர்பார்க்காத வகையில் ஜி.பி.முத்து தன் மகனுக்காக பிக்பாஸ் வீட்டை விட்டு அடம்பிடித்து வெளியேறினார். இதனால் பிக்பாஸ் ரசிகர்கள் வருத்தமடைந்தாலும், ஜி.பி.முத்துவை பாரட்டியும் வருகின்றனர். அதிலும் சில பிரபலங்கள் ஜி.பி. முத்துவின் துணிச்சலான செயலை பாராட்டி சமூக வலைத்தளங்களில் கருத்துகள் பதிவிட்டு வருகின்றனர்.
அந்த வரிசையில் தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநரான சீனுராமாசாமியும் ஜி.பி. முத்துவை புகழ்ந்து பாராட்டியுள்ளார். அதில், "வெற்றி பெற தகுதியான ஒரு போட்டியாளன், அதன் வருமானம் வெகுமானம் யாவற்றையும் பணிவோடு வேண்டாமென துறந்து விட்டு தன் மகனுக்காக புகழ் வாய்ந்த சபையில் உலகறிந்த நடிகர் கேட்டும் கேளாமல் பிக்பாஸ் 6-லிருந்து விடைபெற்ற தமிழ்மகன் ஜி.பி.முத்து தான் தீபாவளியின் வெற்றி நாயகன்" என்று கூறியுள்ளார்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!