
சிம்பு, தயாரிப்பாளர் சங்கம் பிரச்சினையில் உடன்பாடு
மேலும், தேனாண்டாள் முரளி, சுபாஷ் சந்திரபோஸ், சிவசங்கர் ஆகியோருக்கு சிம்பு தரப்பில் தர வேண்டிய பணத்திற்காகவும் அவர்கள் சங்கத்திடம் புகார் அளித்திருந்தனர். அனைத்து புகார்களையும் கருத்தில் கொண்டு சிம்புவின் புதிய படமாக ஆரம்பமான "வெந்து தணிந்தது காடு" படத்தின் படப்பிடிப்பில் வந்து நின்றது.
தயாரிப்பாளர் சங்கத்தின் வேண்டுகோளையும் மீறி அப்படத்தின் படப்பிடிப்பு நடத்த பெப்ஸி ஒத்துழைத்தது. அதனால், பெப்ஸி இல்லாமல் தயாரிப்பாளர்கள் படப்பிடிப்பு நடத்தலாம் என தயாரிப்பாளர் சங்கம் சொல்லியது. அதைக் கண்டு பெப்ஸி நிர்வாகம் அதிர்ச்சிக்குள்ளானது.
இதையடுத்து நடந்த பேச்சுவார்த்தையில் சில உடன்பாடுகள் எட்டப்பட்டுள்ளதாம். அதன்படி நான்கு தயாரிப்பாளர்களுக்கும் தர வேண்டிய பணத்திற்கு "வெந்து தணிந்தது காடு" படத்தின் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் உத்தரவாதம் கொடுத்துள்ளாராம். மேலும், தயாரிப்பாளர் சங்கம் எடுக்கும் முடிவுகளுக்கு கட்டுப்படுவதாகவும் அவர் கடிதம் அளித்துவிட்டதாகச் சொல்கிறார்கள்.
இதையடுத்து "வெந்து தணிந்தது காடு" படத்தின் படப்பிடிப்பு மீண்டும் ஆரம்பமாகப் போகிறதாம். சிம்புவின் படப்பிடிப்புக்கு ஒத்துழைப்பு வழங்குவதாக பெப்சி சார்பிலும் அறிவிக்கப்பட்டுள்ளது.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!