அப்பாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து சொன்ன விஷால் | பிரதீப் ரங்கநாதன் , அட்லி புதிய கூட்டணி! | '7ஜி ரெயின்போ காலனி 2' படத்தில் கேமியோ ரோலில் சோனியா அகர்வால் | 'வாரணாசி' படத்திற்காக அமெரிக்கா பறந்த ராஜமவுலி! | முறுக்கு மீசை, நீளமான முடி புதிய தோற்றத்தில் அருண் விஜய்! | 'ஜெயிலர் 2' படத்தில் எந்தவொரு பாலிவுட் நடிகரும் இல்லை! | முதல்முறையாக போலீஸ் அதிகாரியாக நடிக்கும் சாய் பல்லவி! | 'யாமிருக்க பயமே' இயக்குனருடன் கைகோர்க்கும் நித்யா மேனன்! | 'அபூர்வ சகோதரர்கள்' படத்தில் நாங்கள் எடுத்த ரிஸ்க்: கமல்ஹாசன் | மே மாதப் படங்கள்: 2026ன் முதல் வசூல் வெற்றி |

1991ல் வெளியான இதயம் என்ற படத்தில் இயக்குனரானவர் கதிர். முரளி - ஹீரா நடித்த அப்படம் சூப்பர் ஹிட் அடித்தது. அதையடுத்து உழவன், காதல் தேசம், காதலர் தினம், காதல் வைரஸ் போன்ற படங்களை தொடர்ச்சியாக காதல் கதைகளில் படமாக்கினார். ஆனால் 2002-ல் அவர் தயாரித்து இயக்கிய காதல் வைரஸ் தோல்வியடைந்தது. அதன்பிறகு பல வருடங்களாக படம் இயக்காமல் இருந்தவர் 2016ல் நான் லவ் டிராக் என்ற பெயரில் ஒரு கன்னட படத்தை இயக்கினார்.
இந்நிலையில் தற்போது 19 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழில் ரீஎன்ட்ரி கொடுக்கும் கதிர், புதுமுக நடிகர் கிஷோர் என்பவரை வைத்து மீண்டும் ஒரு புதுமையான காதல் கதையுடன் களமிறங்கப் போகிறார். இப்படத்தை ஆர்.கே.இண்டர் நேசனல் என்ற நிறுவனம் தயாரிக்கிறது.
கதிர் அளித்த பேட்டி: நாயகன் மட்டுமே புதியவர் மற்றபடி படக்குழுவினர் அனைவருமே உலகத்தரம் மிக்க படைப்பாளிகள். ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். நாசர் முக்கிய பாத்திரத்தில் நடிக்கிறார். படத்தில் நடிப்பவர்கள் மற்ற தொழில்நுட்ப குழுவினர் தேர்வு நடந்து வருகிறது. என் ஒவ்வொரு படமுமே நீண்ட இடைவேளைக்கு பின்பே வந்துள்ளது. இடையில், கதைக்காக சில காலம் கடந்து விட்டது. தற்போது இப்படத்தை ஆரம்பபிப்பதில் மகிழ்ச்சி. காதல், ஆக்சன் கலந்த மியூசிக்கல் படமாக இருக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.