
ஆர்யாவுக்கு செல்வராகவன் பாராட்டு
தற்போது சார்பட்டா படத்தைப் பார்த்துள்ள இயக்குனர் செல்வராகவன் படத்தைப் பாராட்டி பதிவிட்டுள்ளார். "அருமையான படம் ரஞ்சித். படத்தின் ஒவ்வோரு காட்சியையும் ரசித்தேன். மற்றும் அன்பே ஆர்யா, ஒவ்வொரு பிரேமிலும் மிளிரிக் கொண்டே செல்கிறாய். உன்னை நினைத்து மிக மிக மகிழ்ச்சி அடைகிறேன்." என்று தெரிவித்துள்ளார்.
செல்வராகவன் இயக்கத்தில் கடந்த 2013ஆம் ஆண்டு இரண்டம உலகம் படத்தில் ஆர்யா நடித்திருந்தார்.
திரவுபதி இயக்குனர்
திரவுபதி இயக்குநர் மோகனின் டுவிட்டர் பதிவில், "சார்பட்டா பரம்பரையின் மொத்த குழுவும் சிறந்த உழைப்பைக் கொடுத்துள்ளனர். நான் கடவுள் படத்துக்குப் பிறகு ஆர்யாவின் மிகச் சிறந்த நடிப்பு. பசுபதி, ஜான் விஜய், டேன்சிங் ரோஸ் கதாபாத்திரங்கள் கவனிக்கத்தக்கவை. ரஞ்சித்தின் கடின உழைப்பு தெளிவாகத் தெரிகிறது. ஒளிப்பதிவு மற்றும் கலை இயக்கம் உச்சம்" என்று குறிப்பிட்டுள்ளார்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!