வரலட்சுமியின் ‛எஸ்.சரஸ்வதி' ஓடிடியில் வெளியானது | நூறு சாமி படத்தின் டீசர் நாளை(ஏப்., 4) வெளியாகிறது | சிம்புவின் 'குத்து' மே மாதம் ரீ ரிலீஸ் | கங்குலியின் வாழ்க்கை படம் துவங்கியது | ஏ.ஐ.,யின் தாக்கம் கவலையளிக்கிறது : கிர்த்தி ஷெட்டி | வெற்றியும், தோல்வியும் சமம் : பூஜா ஹெக்டே பதில் | போரினால் பாதிக்கப்பட்ட ஷாருக்கான் படப்பிடிப்பு | ஏப். 6ல் எல்ஐகே படத்தின் இசை வெளியீடு | அடுத்த படத்திற்கு நீண்ட இடைவெளி விடும் இயக்குனர்கள்… | ஹீரோவான விநாயகராஜ் |

கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினி நடிக்கயிருந்த படம் ராணா. இப்படத்தின் பூஜை சென்னையில் உள்ள ஏவிஎம் ஸ்டுடியோவில் நடைபெற்ற அன்று உடல்நலக்குறைவு ஏற்பட்டுமருத்துவமனையில்அனுமிக்கப்பட்டார் ரஜினி. அதையடுத்து சிங்கப்பூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவிட்டு சென்னை திரும்பினார்.
அதையடுத்து ராணா படம் தொடங்கப்படவில்லை. இதனால் ரஜினியுடன் முதன்முதலாக தீபிகா படுகோனே ஜோடி சேர இருந்தது தடைபட்டது. இருப்பினும் அதையடுத்து செளந்தர்யா ரஜினி இயக்கிய கோச்சடையான் என்ற அனிமேசன் படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடித்தார் தீபிகா படுகோனே.
இந்தநிலையில் தற்போது அண்ணாத்த படத்தில் நடித்துள்ள ரஜினி அடுத்து கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தை இயக்கிய தேசிங்கு பெரியசாமி இயக்கும் படத்தில் நடிப்பதாக செய்திகள் வெளியாகி வரும் நிலையில், அப்படத்தில் தீபிகா படுகோனே நாயகியாக நடிக்கப்போவதாக தற்போது ஒரு புதிய செய்தி சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.