
மம்முட்டி-பார்வதி சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த புழு
காரணம் கடந்த சில வருடங்களுக்கு முன் மம்முட்டி நடிப்பில் வெளியான "கசபா" என்கிற படத்தில், பெண்களை மம்முட்டி இழிவுபடுத்தியுள்ளதாக பார்வதி கூறினார். அது மிகப்பெரிய சர்ச்சையாக மாறியதுடன் அப்படியே பார்வதிக்கு எதிராக திரும்பி, அதனால் கொஞ்ச காலம் படவாய்ப்புகளே கிடைக்காமல் சிரமப்பட்டார் பார்வதி.
அதன்பிறகு ஒரு பேட்டியில், “மம்முட்டியை பற்றியும் அவருடைய படத்தை பற்றியும் விமர்சிக்கவில்லை. நான் பொதுவாக பேசியதை, சிலர் மம்முட்டிக்கு எதிராக பேசியதாக கூறி திரித்து விட்டார்கள்” என விளக்கமும் அளித்தார் பார்வதி. அதன்பின் நிலைமை ஒரளவு சீராகி, பட வாய்ப்புகள் மீண்டும் பார்வதியை தேடி வரத்தொடங்கின. இதோ இப்போது மம்முட்டியுடன் இணைந்து நடிப்பதன் மூலம் நீண்டநாள் சர்ச்சைக்கு தற்போது முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!