
விஜய் தேவரகொண்டா - ராஷ்மிகாவின் ‛ரணபலி படத்தின் முதல் பாடல் வெளியானது
இந்த படம் பிரிட்டிஷ் காலகட்ட 19ஆம் நூற்றாண்டு கதையில் உருவாகிறது. விஜய் தேவரகொண்டா ரணபலியாகவும், ராஷ்மிகா மந்தனா ஜெயம்மா என்ற வேடத்திலும் நடிக்கிறார்கள். திருமணத்திற்கு பிறகு அவர்கள் நடிப்பில் வெளியாக போகும் முதல் படம் இதுவாகும். இந்நிலையில் ரணபலி மற்றும் ஜெயம்மா இடையே காதலை கொண்டாடும் வகையில் முதல் பாடலாக எத்தைய்யா சாமி என்ற பாடலை இன்று தயாரிப்பாளர்கள் வெளியிட்டு உள்ளார்கள்.
இந்த பாடலில் விஜய் தேவரகொண்டா ராஷ்மிகா ஜோடி பாரம்பரிய உடையில், மருதாணி அலங்கரிக்கப்பட்ட கைகள் மற்றும் பழமையான பின்னணியில் அலங்கரிக்கப்பட்ட தங்க நகைகளுடன் இடம் பெற்றுள்ளார்கள். இப்படத்தின் இயக்குனர் ராகுல் சங்கிரித்யன் இந்த பாடலை இந்த ஜோடியின் திருமணத்தை கொண்டாடும் ஒரு சிறிய பரிசு என்று தெரிவித்திருக்கிறார். இப்படத்திற்கு அஜய் அதுல் என்பவர் இசை அமைக்கிறார்.
இப்பாடல், தெலுங்கு, ஹிந்தி , தமிழ், மலையாளம், கன்னடம் என 5 மொழிகளில் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் இதற்கு முன்பு கீதா கோவிந்தம், டியர் காம்ரேட் ஆகிய படங்களில் விஜய் தேவரகொண்டாவும், ராஷ்மிகா மந்தனாவும் இணைந்து நடித்துள்ள நிலையில் இந்த ரணபலி அவர்கள் இணைந்து நடிக்கும் மூன்றாவது படமாகும். இந்த வரலாற்று படம், 2026ம் ஆண்டு செப்டம்பர் 11ஆம் தேதி வெளியாக உள்ளது.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!