தெலுங்கிலும் ஒரு ‛கில்லர்' : எஸ்ஜே சூர்யா என்ன செய்ய போகிறார் | தனிப்பட்ட வாழ்க்கைக்கு கருத்து கூறுவது அநாகரிகம் : ஆரி | ‛தெறி' ரீமேக்கா ‛உஸ்தாத் பகத்சிங்' : இயக்குனர் பதில் | கலை நிகழ்ச்சி போல நடந்த சங்கீத் வைபவம் : விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா நெகிழ்ச்சி | 'தாய்கிழவி' 22 கோடி.. 'வித் லவ்' 35 கோடி | பிளாஷ்பேக் : பாலுமகேந்திராவின் நிறைவேறாத சிவாஜி கனவு | பிளாஷ்பேக் : பாட வந்தவர் நடிகை ஆனார் | அமரனில் மிஸ் ஆச்சு... சேயோனில் அது நடக்குமா? | இயக்குனர் விஜய் என் வழிகாட்டி : ஜியா சங்கர் நெகிழ்ச்சி | நடிகை ஸ்ருதிகாவுக்கு வைரஸ் காய்ச்சல் |

கிராமி விருது பெற்ற வயலின் கலைஞர் கணேஷ் ராஜகோபாலன் 'த்ரிபின்னா' என்ற இந்திய சிம்பொனி இசை ஆல்பத்தை உருவாக்கியுள்ளார். இதன் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. ஏ.ஆர்.ரஹ்மான் ஆல்பத்தை வெளியிட்டு பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது: நானும் கணேஷ் ராஜகோபாலனும் 38 வருட நண்பர்கள். அப்போது இருந்தே அவரது வயலின் இசையை நான் ரெக்கார்ட் செய்து வருகிறேன். நான் முதன்முதலில் கேட்ட வயலின் ஹார்மோனி, இளையராஜாவின் 'ஹவ் டு நேம் இட்'. இன்றைய காலகட்டத்தில் செயற்கை நுண்ணறிவு மூலம் யார் வேண்டுமானாலும் வயலின் இசைக்கலாம். ஆனால், கையில் வாசிக்கும் அனுபவமே சிறந்தது. அதில் தான் மனித உணர்ச்சிகளை கடத்த முடியும். நாம் அனுபவித்த வயலின் அனுபவம் அனைவருக்கும் விரிவடைய வேண்டும். இந்த வயலின் சிம்பொனி பலருக்கும் உத்வேகம் தரும்” என்றார்.




