கோர்ட் உத்தரவை மீறி பேட்டி : மன்னிப்பு கேட்ட ரவி மோகன் | சென்னையில் தான் இருக்கிறேன், ஐதராபாத்தில் குடியேறவில்லை : ஐஸ்வர்யா ராஜேஷ் | ரேனிகுண்டா 2 படத்தின் முதல் பார்வை வெளியீடு | சூர்யாவை தொடர்ந்து அர்ஜூனுக்கும் வெற்றி : 50 கோடியை நெருங்கும் பிளாஸ்ட் | மஞ்சும்மல் பாய்ஸ் மாதிரி தமிழகத்தில் பாலன் ஓடுமா? | அரசன் படத்திற்காக 2 மாதங்களாக இரவில் நடக்கும் படப்பிடிப்பு | 'லிங்கம்' வெப் சீரீஸ் 26ம் தேதி வெளியாகிறது | இங்கிலாந்து மன்னரின் 'சர்' பட்டம் பெற்ற ஹாலிவுட் நடிகர் | பிளாஷ்பேக்: உடலால் வாழ்ந்து, உடலால் வீழ்ந்த உசிலைமணி | பிளாஷ்பேக்: முதல் பாகம் மலையாளத்தில், 2ம் பாகம் தமிழில் |

பிரித்விராஜ் இயக்கத்தில் அவரும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்த ‛எல் 2 எம்புரான்' திரைப்படம் கடந்த மார்ச் மாதம் வெளியானது. அதற்கு முன்னதாக கடந்த வருடம் பிரித்விராஜ் நடிப்பில் வெளியான ‛ஆடுஜீவிதம்' படம் அவரது நடிப்புக்கு விருதுகளை தேடித்தந்தது. ‛குருவாயூர் அம்பல நடையில்' திரைப்படத்திலும் காமெடியில் கலக்கியிருந்தார் பிரித்விராஜ். இந்த நிலையில் தற்போது மீண்டும் அவர் ஆக்சனுக்கு திரும்பியுள்ளார். அந்த வகையில் அவர் தற்போது நடித்து வரும் ‛விலாயத் புத்தா' திரைப்படம் அடுத்ததாக ரிலீசுக்கு தயாராகி வருகிறது. இந்த படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகியுள்ளது.
இந்த படத்தில் பிரித்விராஜ் சந்தன மரம் கடத்தும் டபுள் மோகன் என்கிற கடத்தல்காரன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவருக்கும் எதிர் தரப்புக்கும் ஏற்படும் மோதல் மற்றும் இவருக்கும் போலீசாருக்கும் ஏற்படும் மோதல் என கிட்டத்தட்ட டீசரை பார்க்கும்போதே ஒரு புஷ்பா பீல் ஏற்படுகிறது. ஆனால் அதற்கு பதில் அளிக்கும் வகையில் டீசரில் ஒரு பஞ்ச் வசனம் ஒன்றையும் வைத்துள்ளார்கள். பிரித்திவிராஜிடம் ஒரு போலீஸ் அதிகாரி, “நீ என்ன புஷ்பாவா?” என்று கேட்க, “ஐயோ சார்.. அவர் இன்டர்நேஷனல்.. நான் வெறும் லோக்கல்” என்று கிண்டலாக பதில் அளிப்பது போல் ஒரு காட்சி இடம் பெற்றுள்ளது. டீசரை பார்க்கும்போதே படம் முழுக்க முழுக்க கமர்சியல் ஆக்சன் பாணியில் உருவாகியுள்ளது தெளிவாகவே தெரிகிறது.