'டாடா' போஸ்டர் ஸ்டைலில் 'விஸ்வநாத் அண்ட் சன்ஸ்' போஸ்டர் | சினிமாவை விட்டு விலக நினைத்தேன்: நிவேதிதா சதீஷ் | ஆங்கிலோ இந்திய பெண்ணை காதலிக்கும் வடசென்னை பையன்: 'அன்பே டயானா'வின் கதை | ராதிகாவை கிழவியாக மாற்றிய வினீஷ் | துபாயில் அஜித் பாதுகாப்பாக இருக்கிறார்: மேலாளர் தகவல் | 'மஞ்சும்மல் பாய்ஸ்' இயக்குனர் மீது பாலியல் புகார் | பிளாஷ்பேக்: ஒரே படத்தில் அனைத்தையும் இழந்த தவக்களை | ரீ ரிலீஸில் ஏமாற்றிய விஜய்யின் 'தெறி' | பிளாஷ்பேக்: எஸ்.பி.பாலசுப்ரமணியனை தனக்கு பாட வைத்த சிவாஜி | மார்ச் 4ல் விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா திருமண வரவேற்பு ஏற்பாடுகள் தீவிரம் |

சத்ய சிவா இயக்கத்தில், சசிகுமார், லிஜோமோள் ஜோஸ் மற்றும் பலர் நடிப்பில் நேற்று வெளியாக வேண்டிய படம் 'ப்ரீடம்'. தயாரிப்பாளருக்கு ஏற்பட்ட பைனான்ஸ் பிரச்சனை காரணமாக படம் நேற்று வெளியாகவில்லை. நடைபெற்ற பேச்சு வார்த்தையிலும் சுமூக முடிவு எடுக்கப்படவில்லை. அதனால், இன்றும் படம் வெளியாகாத நிலை ஏற்பட்டுள்ளது. அதனால், படத்தை ஒரு வாரத்திற்குத் தள்ளி வைத்துள்ளதாகச் சொல்கிறார்கள்.
பைனான்சியரிடமிருந்து தயாரிப்பாளர் வாங்கிய கடன் வட்டியுடன் சேர்த்து 5 கோடி வரை வந்துவிட்டதாம். அதில் 2 கோடியாவது தாருங்கள் என பைனான்சியர் தரப்பில் கேட்டதாகத் தகவல். அந்தப் பணத்தையும் தயாரிப்பாளரால் நேற்று ஒரே நாளில் புரட்ட முடியாமல் போயிருக்கிறது. இப்படத்தில் நடித்ததற்காக சசிகுமாருக்குக் கூட அட்வான்ஸ் தவிர்த்து பேசிய மீதித் தொகையைத் தரவில்லையாம். இருந்தாலும் பட வெளியீட்டிற்காக அவர் கூட அந்தப் பணத்தைக் கேட்கவில்லை என்கிறார்கள்.
நல்ல படங்களை மட்டுமே எங்களது நிறுவனத்தில் தயாரிப்போம் என்று இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் பேசியிருந்தார் தயாரிப்பாளர். சில மோசமான படங்கள் எந்த சிக்கலும் இல்லாமல் வெளியாகும் நிலையில், இப்படி ஒரு எண்ணம் கொண்ட தயாரிப்பாளரின் படம் இப்படி சிக்கலில் மாட்டியுள்ளதே என கோலிவுட்டில் வருத்தப்படுகிறார்கள்.




