'கைதி 2' விரைவில் டீசருடன் அறிவிப்பு | பெங்களூருவின் புகழ் பெற்ற ஊர்வசி தியேட்டர் நிரந்தர மூடல் | காமெடி முதல் கிரைம் த்ரில்லர் வரை : இந்த வார ஓடிடி ரிலீஸ்......! | வாரணாசி-க்கு பின்னணி இசை அமைப்பது எப்போது... : கீரவாணி கொடுத்த அப்டேட் | 'சர்வம் மாயா' நாயகிக்கு பாராட்டுடன் பரிசும் அனுப்பிய சூர்யா ஜோதிகா | நன்றி சொன்னார் எஸ்.பி.முத்துராமன் : கண்கலங்கினார் வி.சி.குகநாதன் | ஹனிரோஸுக்கு ஜிஎஸ்டி துறை அனுப்பிய நோட்டீசை தள்ளுபடி செய்த கேரள உயர்நீதிமன்றம் | நடிகர் ஜெயசூர்யாவின் 39 லட்சம் மதிப்புள்ள சொத்துக்களை முடக்கிய அமலாக்கத்துறை | கேரளா பிளஸ் 2 மாதிரி தேர்வில் மோகன்லாலின் சினிமா பயணம் குறித்து கேள்வி | அஞ்சு ரூபாய் டாக்டர் போன்ற கதாபாத்திரத்தில் நடிக்கும் மம்முட்டி |

சுதா கொங்கரா இயக்கத்தில், சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா, ஸ்ரீலீலா மற்றும் பலர் நடித்து வரும் படம் 'பராசக்தி'. தமிழ் சினிமாவில் புதிதாக சில பல பிரம்மாண்டப் படங்களைத் தயாரித்து வரும் டான் பிக்சர்ஸ் இப்படத்தைத் தயாரித்து வருகிறது.
இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் இலங்கையில் நடைபெற்றது. படப்பிடிப்பு முடிந்த பின் நடிகர்கள் உள்ளிட்ட முக்கிய கலைஞர்கள் பலரும் சென்னை திரும்பி விட்டனராம். ஆனால், தயாரிப்புப் பணிகளைக் கவனித்து வந்த சிலர் இன்னமும் இலங்கையில் சிக்கித் தவிப்பதாக கோலிவுட் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இலங்கையில் படப்பிடிப்பு நடத்தியதற்கான செலவுத் தொகையை தயாரிப்பு நிறுவனம், அங்கு படப்பிடிப்பு நடத்த ஏற்பாடு செய்த நிறுவனத்திற்கு இன்னும் தரவில்லையாம். அதனால், அவர்களது பாஸ்போர்ட்களை அந்நிறுவனம் வாங்கி வைத்துள்ளதாகச் சொல்கிறார்கள்.
விஜய் நடித்து வெளிவந்த 'தி கோட்' படப்பிடிப்பு இலங்கையில் நடைபெற்ற போது நடந்த செலவுக்கும் அதைத் தயாரித்த நிறுவனம் பாக்கி வைத்துவிட்டுப் போனதாம். அப்படி இந்த 'பராசக்தி' படத்திற்கு நடந்து விடக் கூடாதென்பதுதான் பாஸ்போர்ட் பிடுங்கல் என்கிறார்கள்.
இவ்வளவு பெரிய நிறுவனங்கள் இப்படி நடந்து கொள்ளலாமா என கோலிவுட்டில் உள்ள தயாரிப்பு நிர்வாகிகள் கடிந்து கொள்கிறார்கள்.
'பராசக்தி' படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு திட்டமிட்டபடி மீண்டும் ஆரம்பமாகவில்லை என்றும் ஒரு தகவல். தயாரிப்பு நிறுவனம், இயக்குனர் சுதா கொங்கரா ஆகியோருக்கிடையே ஏதோ பிரச்சனையாம். சுதாவின் அணுகுமுறையும் படத்தின் நடிகர்களுக்குப் பிடிக்கவில்லை என்று ஒரு பேச்சு.




