
அல்லு அர்ஜுன் ஸ்டைலை பின்பற்றி ராம் சரண், அகில்
புச்சிபாபு சனா இயக்கத்தில் ராம் சரண், ஜான்வி கபூர் நடிக்கும் "பெத்தி" படத்தில் அது போன்ற முரட்டுத்தனமான தோற்றத்தைத்தான் ராம் சரண் கதாபாத்திரத்திற்கு அமைத்துள்ளார் இயக்குனர். அதன் முதல் பார்வை வந்த போதே அல்லு அர்ஜுனின் ரசிகர்கள் அதை கிண்டலடித்தனர்.
அடுத்து நாகார்ஜுனா, அமலா ஆகியோரின் மகன் அகில் நடிக்கும் அடுத்த படமான "லெனின்" படத்திற்கும் அது போன்ற ஒரு தோற்றத்தையே அவருக்கு உருவாக்கியுள்ளார்கள். மிகவும் வெள்ளை நிறத்தவரான அகிலுக்கு, தாடி, மீசை, கொஞ்சம் நீள தலைமுடி, கருப்புத் தோற்றம் என சிரமப்பட்டு மாற்றியுள்ளார்கள்.
டோலிவுட்டில் அடுத்து இந்தத் தோற்றத்தில் யார் தங்களை மாற்றிக் கொள்ளப் போகிறார்கள் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!