
பாலா விழாவில் கலந்து கொள்ளாதது ஏன்? லைலா விளக்கம்
பாலா இயக்கிய வணங்கான் பட வெளியீட்டிற்காக நடத்தப்பட்ட புரமோசனின் ஒரு பகுதியாக பாலா சினிமாவுக்கு வந்து 25 ஆண்டுகள் ஆனதை விழா நடத்தி கொண்டாடினார்கள். இதில் சூர்யா, சிவகுமார், அருண் விஜய் என அவரோடு பணியாற்றியவர்கள் கலந்து கொண்டார்கள். ஆனால் பாலாவோடு நெருக்கமான நட்பில் இருந்த லைலாவும், பூஜாவும்(நான் கடவுள்) கலந்து கொள்ளவில்லை. பாலாவால் மறுவாழ்வு பெற்ற விக்ரமும் கலந்து கொள்ளவில்லை. விழாவிற்கு பிறகு இதுகுறித்து நடந்த நேர்காணல்களில் பாலா கூறும்போது " அவர்களுக்கு ஆயிரம் வேலையிருந்திருக்கும். யார் வராதது குறித்தும் எனக்கு வருத்தமில்லை" என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்த நிலையில் லைலா இதுகுறித்து விளக்கம் அளித்திருக்கிறார். அவர் கூறியிருப்பதாவது: விழாவில் கலந்து கொள்ள பாலா சார் போனில் அழைப்பு விடுத்திருந்தார். நானும் கலந்து கொள்ள ஆர்வமாகத்தான் இருந்தேன். ஆனால் ஏற்கெனவே ஒப்புக்கொண்ட ஒரு தெலுங்கு படத்தில் நடிக்க வேண்டியதாக இருந்தது. இதனால் ஆந்திராவில் இருந்து என்னால் விழாவுக்கு வர முடியவில்லை.
பாலா சாரின் படங்களில் எனக்கு அற்புதமான கேரக்டர்கள் அமைந்தது. "பிதாமகன்" படம் எனது கேரியரில் மிக முக்கியமான படம். அந்த படத்தில் நான் பேசிய வசனத்தை இப்போதும் ரசிகர்கள் மீம்சாக பயன்படுத்தி வருகிறார்கள். ரசிகர்கள் என்னை மறக்காமல் இருப்பதற்கு காரணமும் பிதாமகன் படம்தான். ரீ என்ட்ரியில் எனக்கு நல்ல கேரக்டர்கள் கிடைத்து வருவது மகிழ்ச்சியாக இருக்கிறது. "சப்தம்" படத்திற்காக நான் முதன் முறையாக தமிழ், தெலுங்கு இரண்டு மொழிகளிலும் நானே டப்பிங் பேசி இருக்கிறேன். என்கிறார்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!