போஸ்ட் புரொக்ஷன் ஸ்டூடியோ திறந்தார் ஏ.எல்.விஜய்
மார் 03, 2025
Advertisement
பிரபல தயாரிப்பாளர் ஏ.எல்.அழகப்பனின் மகன் இயக்குனர் விஜய். பிரியதர்ஷனிடம் உதவியாளராக இருந்து "கிரீடம்" படத்தின் மூலம் இயக்குனர் ஆனார். அதன்பிறகு பொய் சொல்லப் போறோம், மதராசபட்டிணம், தெய்வதிருமகள், தாண்டவம், தலைவா, தேவி, தலைவி உள்ளிட்ட படங்களை இயக்கினார். கடைசியாக "மிஷன் சேப்டர் 1" படத்தை இயக்கினார்.
இந்த நிலையில் விஜய் "டி ஸ்டூடியோ போஸ்ட்" என்ற பெயரில் போஸ்ட் புரோக்ஷன் ஸ்டூடியோ திறந்துள்ளார். இங்கு படப்பிடிப்புக்கு பிந்தைய பணிகளை செய்யலாம். சென்னை சாலிகிராமத்தில் பிரசாத் அவன்யூவில் அமைந்துள்ள இந்த ஸ்டூடியோவை சிவகுமாரும், பிரியதர்ஷனும் திறந்து வைத்தனர். விழாவில் நடிகைகள் சாயிஷா, லட்சுமி ராமிருஷ்ணன், சரண்யா, மஞ்சிமா மோகன், நடிகர்கள் நட்டி நடராஜ், உதயா, தம்பி ராமய்யா, தயாரிப்பாளர் ஐசரி கணேஷ், ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!