மூன்றே மாதங்களில் 150 மில்லியன் பார்வைகளைப் பெற்ற 'பாரடைஸ்' படத்தின் 'ஆயா ஷேர்' பாடல்! | விஜயின் த.வெ.க கட்சியில் இணையும் திரை பிரபலம் | நீதிமன்றத்தில் உறுதி அளித்தபடி சாமுண்டீஸ்வரி கோவிலில் வழிபட்ட ரன்வீர் சிங் | போலீஸ் ஸ்டேஷனில் எங்களை மிரட்டி எழுதி வாங்கினார்கள் : திரிஷ்யம் நடிகை குற்றச்சாட்டு. | விவாகரத்துக்கு பிறகு ரூ.120 கோடி கேட்கும் முன்னாள் மனைவி அம்ரிதா : பாலா கண்ணீர் பேட்டி | கிராமத்துக் கதையில் நாயகனாக நடிக்கும் ரகுமான் | ஊர்வசியுடன் நடிக்க பயம் : ஜெயராம் | காஷ்மீர் பள்ளிக்கு ஒரு கோடி நிதி வழங்கிய அக்ஷய் குமார் | ருக்மணி வசந்த் கவர்ச்சி படங்களை வெளியிட்ட இருவர் பிடிபட்டனர் | பிளாஷ்பேக் : ரஜினியை ஹீரோவாகிய இயக்குனரை பற்றி தெரியுமா? |

சமூக வலைத்தளங்களில் பிசியாக இருக்கும் தென்னிந்திய நடிகைகளில் முக்கியமானவர் திரிஷா. தனது படம் பற்றிய தகவல்கள், புகைப்படங்கள், தனது சுற்றுப்பயணங்கள் குறித்து அடிக்கடி பதிவு வெளியிடும் திரிஷா அவ்வப்போது வளர்ப்பு பிராணிகள் குறித்தும் பதிவிடுவார். குறிப்பாக தெரு நாய்கள் பற்றி அதிகமாக பதிவிடுவார்.
இந்த நிலையில் தற்போது அவர் வெளியிட்டுள்ள ஒரு பதிவு புதிராக இருக்கிறது. பலரும் இதனை ஆச்சரியத்துடன் கவனித்து வருகிறார்கள்.அதில் அவர், "நான் மனிதர்களை தவிர்த்துவிடுகிறேன். நாய்களை நேசிக்கிறேன். எனது நாய் மற்ற நாய்களை தவிர்த்துவிடுகிறது. மனிதர்களை நேசிக்கிறது. நாம் இணைந்து நேசம் மிகுந்த சமூகத்தை உருவாக்குவோம்" என்று பதிவிட்டுள்ளார்.
இந்தப் பதிவின் மூலம் திரிஷா மறைமுகமாக ஒரு விஷயத்தை சொல்ல வருகிறார் என்று நெட்டிசன்களும், ரசிகர்களும் கருத்தை வெளியிட்டு வருகிறார்கள்.
திரிஷா, தற்போது அஜித் ஜோடியாக 'விடாமுயற்சி', 'குட் பேட் அக்லி' மற்றும் கமல்ஹாசனுடன் 'தக் லைப்' படங்களில் நடிக்கிறார். தெலுங்கில் சிரஞ்சீவியுடன் 'விஸ்வம்பரா', மலையாளத்தில் மோகன்லாலுடன் 'ராம்' ஆகிய படங்களை கைவசம் வைத்திருக்கிறார்.




