முதல்வர் விஜய்க்கு டைம் கொடுங்க : குஷ்பு | திரையரங்குகளுக்கு ஜாக்பாட்... இனி 5 காட்சி திரையிடலாம் : முதல்வர் விஜய் உத்தரவு | 'ஆனந்தம்' 25 வருடங்கள் : இயக்குனர் லிங்குசாமி நன்றி | நடிகர் தர்மேந்திராவுக்கு 'பத்ம விபூஷன்' விருது: மனைவி ஹேமமாலினி பெற்றார் | இயக்குனர் சேரனின் தாயார் காலமானார் | கேன்ஸ் திரைப்பட விழாவில் கவனத்தை ஈர்த்த ஐஸ்வர்யா ராய் | கார்த்தி 30 துவங்கியது | மராத்தி படங்களின் வசூலில் முதலிடம் பிடித்த 'ராஜா சிவாஜி' | இந்த முறையாவது சொன்ன தேதியில் ஜனநாயகன் வருமா? | கேரள கவர்னரிடமிருந்து கவுரவ முனைவர் பட்டம் பெற்ற மம்முட்டி |

கமல் நடிப்பில் இந்தியன்-2, ராம்சரண் நடிப்பில் கேம் சேஞ்சர் ஆகிய இரண்டு படங்களையும் ஒரே நேரத்தில் இயக்கி வந்தார் ஷங்கர். இந்த நிலையில் கடந்த ஜூலை மாதத்தில் இந்தியன்- 2 திரைக்கு வந்த நிலையில் கேம் சேஞ்சர் படத்தின் இறுதி கட்டப் படப்பிடிப்பில் ஈடுபட்டு வந்தார். தற்போது அப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து புரமோஷன் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இப்படத்தின் முதல் சிங்கிள் பாடல் வெளியான நிலையில், தற்போது செகண்ட் சிங்கிள் பாடல் செப்டம்பர் மாதம் வெளியாக இருப்பதாக விநாயகர் சதுர்த்தியை ஒட்டி ஒரு அறிவிப்பு வெளியிட்டுள்ளார் ஷங்கர்.
மேலும், தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளில் வெளியாக உள்ள இந்த கேம் சேஞ்சர் படத்திற்கு தமன் இசை அமைத்திருக்கிறார். ராம் சரணுடன் கியாரா அத்வானி, அஞ்சலி, எஸ்.ஜே.சூர்யா, ஸ்ரீகாந்த், ஜெயராம், பிரகாஷ்ராஜ், சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள இந்த படம் இந்த ஆண்டு டிசம்பரில் திரைக்கு வரவுள்ளது. இப்படம் குறித்த ஒரு புதிய போஸ்டரை தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறார் இயக்குனர் ஷங்கர்.




