வாழை 2 படம் குறித்து புதிய தகவல் | பஹத் பாசில், பிரேம் குமார் பட படப்பிடிப்பு துவங்கியது | 34 வருடங்களுக்கு பிறகு இணையும் கூட்டணி | அருண் விஜய், மிஷ்கின் புதிய கூட்டணி | நடிகர் கவுண்டமணி பற்றி பலரும் அறிந்திராத விஷயங்கள் | இயக்குனர், நடிகருக்கு அடுத்து தயாரிப்பாளர் அவதாரம் எடுக்கும் பிரதீப் ரங்கநாதன் | ஜூன் 5க்கு தள்ளிப்போன ‛பரிமளா அண்ட் கோ' ரிலீஸ் | பிளாஷ்பேக்: ஆங்கில கதையின் தழுவலில் வந்து, அபார வெற்றியைப் பெற்ற “மனோன்மணி” | விக்னேஷ்சிவன் அப்படி செய்திருக்ககூடாது: நடிகை சோனா | முதல்வர் விஜய் இரட்டை வேடம் போடுங்க : கூல் சுரேஷ் திடீர் வேண்டுகோள் |

தனுஷ் இயக்கம், நடிப்பில் ஜூலை 26ம் தேதி தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாக உள்ள படம் 'ராயன்'. இப்படத்திற்கு தணிக்கைக் குழுவினர் 'ஏ' சான்றிதழை வழங்கியுள்ளார்கள். படத்தில் நிறைய வன்முறைக் காட்சிகள் உள்ளதால் இந்த சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.
ஏஆர் ரஹ்மான் இசையமைக்கும் இப்படத்தில் சந்தீப் கிஷன், காளிதாஸ் ஜெயராம், துஷாரா விஜயன், அபர்ணா பாலமுரளி, வரலட்சுமி சரத்குமார், எஸ்ஜே சூர்யா, செல்வராகவன், பிரகாஷ் ராஜ், மற்றும் பலர் நடித்துள்ளனர்.
தனுஷ் நடித்து இதற்கு முன்பு வெளிவந்த 'வட சென்னை' படம்தான் 'ஏ' சான்றிதழ் பெற்று வெளியானது. அதற்குப் பிறகு இப்போது 'ராயன்' படம் அந்த சான்றுடன் வெளியாக உள்ளது.
படத்தில் உள்ள சில வன்முறைக் காட்சிகளை நீக்கிவிட்டு மறு தணிக்கைக்கு விண்ணப்பிக்க தனுஷ் ஆலோசனை சொன்னாராம். ஆனால், படத்தைப் பார்த்த தயாரிப்பாளர் பரவாயில்லை, தியேட்டர்களில் அப்படியே வெளியாகட்டும். டிவியில் ஒளிபரப்பாகும் போது வேண்டுமானால் மறு தணிக்கை செய்து கொள்ளலாம் என்று சொல்லிவிட்டாராம்.




