ஹீரோக்களை ஓரங்கட்டிய பிசாசு நடிகை | அரசியல்: கோபத்தில் கொந்தளிக்கும் நடிகர் | பிளாஷ்பேக்: சிவாஜி - சவுகார் ஜானகி இணைந்து நடித்த முதல் திரைக்காவியம் “படிக்காத மேதை” | திருச்சி கிழக்கில் போட்டியிடுகிறாரா லாரன்ஸ்? ஜூன் 11ல் முக்கிய அறிவிப்பு | 'திரிஷ்யம்-3' ஹிந்தி பதிப்பு மாறுபட்ட கதை: அஜய் தேவ்கன் | கார்த்திக் ஆரியனுடன் நடிக்க வேண்டும் என்பது நீண்ட நாள் ஆசை! - ராஷி கண்ணா வெளியிட்ட தகவல் | 'பெத்தி' படம் பார்க்க ஹைதராபாத் கிளம்பி வந்த ஜப்பானிய ரசிகைகள் | நடிகர் உன்னி முகுந்தன் புகாரின் பேரில் போதைப்பொருள் பயன்படுத்தியவர்கள் அதிரடி கைது | சிரஞ்சீவி படத்தில் இணைந்த ரக்ஷிதா ராம் | ஓணம் பண்டிகைக்கு வெளியாகும் பெத்லகேம் குடும்ப யூனிட் |

எழுத்தாளர்கள் இயக்குனராவது அதிகரித்துள்ளது. ராசி அழகப்பன், அஜயன் பாலா, பாஸ்கர் சக்தி போன்று தற்போது சினிமாவுக்கு வந்துள்ள எழுத்தாளர் ராஜ்தேவ். ஏராளமான சிறுகதைகளும், நாவல்களும் எழுதியுள்ளார். இவர் எழுதிய கிஸ் டெத், ஏ ஸ்டேன்ஜர் இஸ் வாக்கிங் பை என இரண்டு திரைக்கதைகள் லாஸ் ஏஞ்சல்ஸ் உலகத் திரைப்பட விழாவில் விருது பெற்றது. தற்போது அவர் இயக்கும் படம் 'சத்தம் இன்றி முத்தம் தா'.
இந்த படத்தில் ஸ்ரீகாந்த், விக்னேஷ், பிரியங்கா திம்மேஷ் சந்தியா, ஹரிஷ் பேராடி, இன்ஸ்பெக்டர் எட்வர்ட், வியான், ரகு, நிஹாரிகா, ஷீலா உள்பட பலர் நடித்துள்ளனர். ஜுபின் இசை அமைக்கிறார். யுவராஜ் ஒளிப்பதிவு செய்கிறார். ரொமான்டிக் திரில்லராக படம் உருவாகி வருகிறது. படத்தின் பணிகள் தற்போது இறுதி கட்டத்தை நெருங்கி உள்ளது. அடுத்த மாதம் வெளியிட திட்டமிட்டிருக்கிறார்கள்.