
புதிய சாதனை படைத்த விசில் போடு
24 மணி நேரத்தில் இப்பாடல் புதிய சாதனையை யு டியூபில் படைத்துள்ளது. இதுவரை வெளிவந்த பாடல்களில் விஜய் நடித்த "பீஸ்ட்" படப் பாடலான "அரபிக்குத்து" பாடல் 24 மணி நேரத்தில் 23.7 மில்லியன் பார்வைகளைப் பெற்று முதலிடத்தில் இருந்தது. "விசில் போடு" பாடல் 24.8 மில்லியன் பார்வைகளைப் பெற்று அந்த சாதனையை முறியடித்துள்ளது.
இருப்பினும் பாடலுக்கான லைக்குகளில் "விசில் போடு" பின்தங்கிவிட்டது. "அரபிக்குத்து" பாடலுக்கு 24 மணி நேரத்தில் 2.20 மில்லியன் லைக்குகள் கிடைத்தது. ஆனால், "விசில் போடு" பாடலுக்கு 1.25 மில்லியன் லைக்குகள் மட்டுமே கிடைத்துள்ளது.
இருவிதமான விமர்சனங்களைப் பெற்று இந்த பாடல் தற்போது 30 மில்லியன் பார்வைகளைக் கடந்து டிரெண்டிங்கில் முதலிடத்திலும் உள்ளது.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!