
விஷாலின் ‛ரத்னம் டிரைலர் வெளியீடு : ஆக்ஷன் ‛ஓகே... எதற்காக அந்த கெட்டவார்த்தை
வரும் ஏப்., 26ல் படம் திரைக்கு வர உள்ள நிலையில் ரத்னம் படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது. டிரைலர் முழுக்க முழுக்க விஷாலின் ஆக்ரோஷமான ஆக்ஷன் காட்சிகள் இடம் பெற்றுள்ளன. நாயகி பிரியா பவானி சங்கரை ஒரு கும்பல் கொல்ல துடிக்கிறது. அவர்களிடமிருந்து பிரியாவை காப்பாற்றும் விஷால் எதிரிகளை எப்படி பந்தாடுகிறார் என்பதே கதைக்களமாக இருக்கும் என டிரைலரை பார்க்கையில் புரிகிறது. ஹரியின் வழக்கமான ஆக்ஷன், மசாலா மற்றும் அரிவாள் கலாச்சாரங்கள் இந்த படத்திலும் இடம் பெற்றுள்ளன.
அதேசமயம் சமீபகாலமாக முன்னணி நடிகர்களின் படங்களின் டிரைலரில் கெட்டவார்த்தை இடம் பெறுவது தொடர்கதையாகி வருகிறது. இந்த படத்திலும் இரண்டு இடங்களில் கெட்டவார்த்தை இடம் பெற்றுள்ளது. இது சென்சார் செய்யப்படாத டிரைலர் காட்சி என்பதால் அப்படியே விட்டுவிட்டார்களா அல்லது இதை வைத்து எதுவும் பப்ளிசிட்டி கிடைக்கும் என எதிர்பார்க்கிறார்களா என தெரியவில்லை.
டிரைலர் லிங்க் : https://www.youtube.com/watch?v=X6srnSdOJU8





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!